விவசாயத்தில் இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?


விவசாயத்தில் இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?

சின்ன சின்ன குறிப்புகள் !!

Bright Zoom

🍀 பாகற்காய், பூசணி, புடலங்காய், பீர்க்கங்காய் போன்ற காய்கறி விதைகளின் முளைப்புத் திறனை அதிகரிக்க, சாணியில் வறட்டி தட்டி அதில் விதைகளை பதித்து காய வைக்க வேண்டும். தேவையான பொழுது உதிர்த்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

🍀 பயிர்களில் பூச்சி தாக்குதலை தடுக்க முன்னெச்சரிக்கையாக நடவு செய்வதற்கு முன் ஏக்கருக்கு 200 கிலோ வேப்பங்கொட்டைத் தூள் இட வேண்டும்.

🍀 கத்தரியில் பூச்சி தாக்குதலை சமாளிக்க நட்ட 30 நாட்கள் கழித்து, ஏக்கருக்கு 50 கிலோ வேப்பம்பிண்ணாக்கு அளிப்பதன் மூலம் பூச்சி தாக்குதலை குறைக்கலாம்.

🍀 வீட்டுத்தோட்ட செடிகளில் காய்புழுக்களை கட்டுப்படுத்த சீத்தா பழவிதை, தங்க அரளிவிதை இவற்றை இடித்து தண்ணீரில் இரண்டு நாட்கள் ஊறவைத்து அவற்றுடன் காதி சோப்பு சிறிதளவு கலந்து செடிகளின் மீது தெளிக்க வேண்டும்.

🍀 பூக்கள் திரண்ட காய்களாக மாறுவதற்கும், அதிக காய்கள் பெறுவதற்கும் அயல் மகரந்த சேர்க்கை தான் சிறந்தது. அதற்கு தேமோர் கரைசல் மிகவும் சிறந்ததாகும்.


🍀 அழுகிய பழங்களை நன்றாக பிசைந்து, இரண்டு கிலோவிற்கு அரை கிலோ என்ற அளவில் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்கு பிசைந்து, ஒரு வாளியில் 15 நாட்கள் மூடி வைக்க வேண்டும். காலையும், மாலையும் நன்கு கிளறி விட வேண்டும். இயற்கையான வளர்ச்சி ஊக்கி தயார். இதனை 1 லிட்டருக்கு 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

🐄 மாடுகளுக்கு வாரம் ஒரு முறை ஒரு கையளவு வேப்பிலையும், அகத்திக் கீரையையும் அளிக்க வேண்டும். இதனால் மாடுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கூளை குடியைக் கெடுக்கும்

குட்டைக்கலப்பை காட்டைக் கெடுக்கும்
🍀 வேளாண்மைக்குப் பயன்படுத்தும் கருவிகள் சரியாக இருந்தால் தான் விவசாயம் நன்றாக இருக்கும்.

🍀 இல்லையென்றால் நிலம் வீணாகி வெள்ளாமை பாதிக்கப்படும்.

🍀 எனவே, சரியான அளவில் கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்பதை இப்பழமொழி விளக்குகிறது.






விவசாயத்தில் இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா? விவசாயத்தில் இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா? Reviewed by Bright Zoom on February 19, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.