வெங்காய சாகுபடி


வெங்காய சாகுபடி

நம் அன்றாட சமையலில் நாம் அதிகம் பயன்படுத்துவது வெங்காயம். அதனுடைய பயன்களோ அளவற்றது. ஏனெனில் வெங்காயமானது உடல் ச்சூடை குறைத்து, இரத்த ஓட்டத்தை சீர் படுத்துகிறது. அதனால் நம் சமையலில் அது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அதனால் இதனை பயிர் செய்வதன் மூலம் குறைவான முதலீட்டில் நிறைவான இலாபம் அடையலாம்.

சாகுபடி செய்யும் முறைகள் :

✨ குறுகிய காலத்தில் மகசூல் கொடுக்கும் பயிர்களில் கீரைகளுக்கு அடுத்த இடத்தில் இருப்பது வெங்காயம். வெங்காய சாகுபடி செய்வதற்க்கு நல்ல மண் வளம் போதுமானது.

✨ ஏக்கருக்கு 5 முதல் 6 கிலோ விதைகள் தேவைப்படும். ஒரு கிலோ விதைக்கு 400 கிராம் அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தை ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து 30 நிமிடம் நிழலில் உலர்த்தி, நாற்றங்காலில் விதைக்க வேண்டும்.

✨ நடவுக்கு முன்பு பார் பாத்திகளின் இருபுறமும் அடி உரமாக, ஏக்கருக்கு 30 கிலோ தழைச்சத்தும், 60 கிலோ மணிச்சத்தும், 30 கிலோ சாம்பல் சத்தும் இட வேண்டும். பின்னர் நடவு செய்த 30 நாட்கள் கழித்து, 30 கிலோ தழைச் சத்தினை மேலுரமாக இட்டு மண்ணை அணைக்க வேண்டும்.

✨ விதை வெங்காயம் நடவு செய்த 30 நாள் கழித்து களை எடுத்து, மேலுரமிட்டு மண் அணைத்து, நீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் தேவைக்கு ஏற்ப களை எடுத்து நிலத்தை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும்.

✨ வயலில் வெங்காயத்தின் இலைகள் 75 சதவீதம் காய்ந்து விட்டால் பயிர் முதிர்ச்சி அடைந்திருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். அறுவடைக்கு 7 நாட்கள் முன்பு நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சவேண்டும்.

அறுவடை:

✨ வெங்காயம் நடவு செய்த 140 முதல் 150 நாட்களில் அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 6 முதல் 7 டன் மகசூல் கிடைக்கும்.

நோய்:

✨ இந்தப் பயிரில் சாறு உறிஞ்சும் ப்பூசிகளின் பாதிப்பு பரவலாக காணப்படும். இதைக் கட்டுப்படுத்த மோனோகுரோட்டோபாஸ் மருந்தை ஒரு சதவீதம் தௌpக்க வேண்டும். மேலும் இலைப்புள்ளி நோய் பரவலாக காணப்படும். அதை கட்டுப்படுத்த இன்டோபில் எம் 45 என்ற மருந்தை 2 சதவீதம், தெளிக்க வேண்டும்.



வெங்காய சாகுபடி  வெங்காய சாகுபடி Reviewed by Bright Zoom on March 31, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.