பாம்புகள் மட்டுமே வாழும் மர்மத் தீவு! உள்ளே போனால் உயிருடன் திரும்ப முடியாது...!


பாம்புகள் மட்டுமே வாழும் மர்மத் தீவு! உள்ளே போனால் உயிருடன் திரும்ப முடியாது...!

 Most Mysterious Real Snake Island

இந்த உலகில் மிகவும் ஆபத்தான பல பகுதிகள் உள்ளன, அவற்றில் ஒன்றுதான் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் பிரேசிலில் உள்ள சாம்பாலோ என்ற தீவு. சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள இந்த தீவில் உலகிலேயே மிகவும் கொடிய விஷம் கொண்ட எண்ணிலடங்காத பாம்புகள் மட்டுமே இருக்கின்றன. இதனாலேயே இந்த தீவிற்கு பாம்புகள் தீவு என்று பெயரிடப்பட்டுள்ளது.



இந்த தீவில் ஒரு சதுர மீட்டருக்கு ஒரு பாம்பையாவது பார்க்க முடியுமாம், அதாவது நீங்கள் கால் வைக்கும் ஒவ்வொரு 3 அடிக்கும் ஒரு பாம்பு என்றால் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அதிலும் குறிப்பாக உலகிலேயே அதிக விஷம் கொண்ட கோல்டன் லான்செட் என்ற பாம்பு இந்த தீவில் தான் அதிக அளவில் காணப்படுகிறது.

இந்த பாம்புகள் கடித்தால் ஒரு மணி நேரத்திலேயே உயிர் போய்விடும் என்றால் இதன் விஷம்ஆபத்தானதாக இருக்கும். இந்த தீவிற்கு தவறுதலாக கூட கப்பல்கள் வந்து விடக்கூடாது என்பதற்காக பிரேசில் அரசு 1909ஆம் ஆண்டு எச்சரிக்கை ஒலி உடைய ஒரு லைட்ஹவுஸை இந்த தீவில் அமைத்தது, அதில் ஒரு குடும்பமும் லைட் ஹவுஸ் பராமரிப்பிற்காக தங்க வைக்கப்பட்டது.




இவர்கள் ஒருநாள் இரவில் தவறுதலாக லைட்ஹவுஸில் உள்ள ஒரு ஜன்னலை மூடாமல் விட்டுவிட்டனர், இதனால் உள்ளே நுழைந்த பத்திற்கும் மேற்பட்ட பூட்டான் லான்செட் பாம்புகள் கடித்ததில் கணவன் மனைவி 2 குழந்தைகள் உட்பட 4 பேரும் இறந்துவிட்டனர்.

இந்த தீவில் பாம்புகளை அகற்றிவிட்டு வாழை சாகுபடி செய்து மக்களை குடியமர்த்த பல ஆண்டுகளாக பிரேசில் அரசு முயற்சி செய்தது, ஆனால் மனித வாடையை உடனே உணர்ந்து கொள்ளக்கூடிய அசாத்திய சக்தி கொண்ட இந்த பாம்புகள் இருப்பதால் பிரேசில் அரசு தனது முயற்சியை கைவிட்டது. பிரேசில் அரசு தனது முயற்சியை கைவிட்டு இந்த தீவிற்குள் நுழைவதற்கு தடை விதித்தது.



இங்கு உள்ள கோல்டன் லான்செட் பாம்பானது தற்போதைய கள்ளச் சந்தையில் சுமார் 20 லட்சம் வரை போவதால் சிலர் இதை பிடித்து கள்ளச் சந்தையில் விற்று விடுகின்றனர். இவ்வாறு பிடிக்க முயற்சிக்கும் போது இந்த பாம்பினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த தீவில் உள்ள பாம்புகளை பாதுகாப்பதற்காக தீவு தற்பொழுது மூடி வைக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் கூட செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில் இந்த தீவிற்குள் ஆராய்ச்சி செய்வதற்காக செல்ல வேண்டுமென்றால் பிரேசில் அரசிடம் அனுமதி பெற்றால் மட்டுமே செய்ய முடியும்.

இந்த தகவல் பற்றிய உங்களுடைய கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் செய்து மறக்காமல் ஷேர் செய்யவும்.
இது போன்ற தகவலுக்கு எங்களை உடனே ஈ மெயில் மூலம் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்

பாம்புகள் மட்டுமே வாழும் மர்மத் தீவு! உள்ளே போனால் உயிருடன் திரும்ப முடியாது...!  பாம்புகள் மட்டுமே வாழும் மர்மத் தீவு! உள்ளே போனால் உயிருடன் திரும்ப முடியாது...! Reviewed by Bright Zoom on March 27, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.