தமிழகத்தில் புதிதாக 4 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்! மத்திய அமைச்சரவை அனுமதி

தமிழகத்தில் புதிதாக 4 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்! மத்திய அமைச்சரவை அனுமதி..!!




மாணவர்கள் நலன் கருதி இந்தியா முழுவதும் 50 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக நான்கு கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்அளித்துள்ளது.

இந்தியா முழுவதும் 1,199 பள்ளிகளும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் உள்ளன.

 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், மத்திய மனிதவளத்துறையின்கீழ்செயல்பட்டுவருகின்றன.

 இந்தப் பள்ளிகளுக்கு, மத்திய அரசு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்வதால், இங்கு கல்விக் கட்டணம் மிகவும் குறைவு.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மிகக் குறைந்த கட்டணத்தில் மாணவர்களைச் சேர்ப்பதால், பெரிய அளவில் போட்டி நிலவுகிறது. 

மத்திய அரசின் கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சேர்க்கப்படும் மாணவர்கள், கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என்பது கூடுதல் சிறப்பு.

கேந்திரிய வித்யாலாயா பள்ளிகளைக் கூடுதலாக அமைக்கப்பட வேண்டுமென்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வலியுறுத்தி வந்தனர். 

மாணவர்கள் நலன் கருதி இந்தியா முழுவதும் 50 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தில் திருப்பூர், மதுரை, கோவை மற்றும் சிவகங்கை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் புதிதாக கேந்திரியா வித்யாலாயா பள்ளிகள் அமைக்கப்பட உள்ளன.




தமிழகத்தில் புதிதாக 4 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்! மத்திய அமைச்சரவை அனுமதி தமிழகத்தில் புதிதாக 4 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்! மத்திய அமைச்சரவை அனுமதி Reviewed by Bright Zoom on April 26, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.