அரசுப் பள்ளியில் ஆசிரியராக வேண்டுமா?
ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு வரும் மார்ச் 15ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சமீபத்தில் அறிவித்தது.
ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம், 1ஆம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரைக்குமான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற வேண்டும் என்றால், மீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
வுநுவு தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு என்ன?
18 முதல் 40 வயது உடையவர்கள் வுநுவு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
என்ன படித்திருக்க வேண்டும்?
TET paper -1 :
12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 2 ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 4 ஆண்டு பி.எட். பயிற்சி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் 5 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்பை பெறமுடியும்.
TET paper -2 :
பட்டப்படிப்புடன், 2 ஆண்டு பி.எட் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் தேர்ச்சி பெறுவோர் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்பை பெறலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பதாரர்கள் தாள் 1 மற்றும் 2-க்கு தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க : இங்கே கிளிக் செய்யுங்கள்
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து, கட்டாயம் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.
புகைப்படம், கையொப்பம் இல்லாத விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
மெயில் ஐ.டி, மொபைல் எண் கட்டாயம் தேவை. மெயில் ஐ.டி அடிக்கடி உபயோகத்தில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
விண்ணப்பத்தில் கேட்டிருக்கும் விஷயங்கள் ஒன்று விடாமல், விண்ணப்பதாரர்கள் ப்பூத்தி செய்துக் கொள்ள வேண்டும். முழுமையாக ப்பூத்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
எந்த நாள் வரை விண்ணப்பிக்கலாம்?
TET தேர்வுக்கு ஏப்ரல் 05, 5.00Pஆ வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
தேர்வுக் கட்டணம் எவ்வளவு?
SC, SCA, ST and Person with
Disability அல்லாதோருக்கு கட்டணம்
Rs. 500/
SC, SCA, ST and Person with
Disability Rs. 250/
தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை:
ஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்த முடியும். இதில் முதல் மற்றும் 2-ம் தாள் தேர்வுகளுக்கு தனித்தனியாக தேர்வுக்கட்டணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் நடைபெறும் நாள் :
முதல் மற்றும் 2-ம் தாள்களுக்கான தேர்வுகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.
அரசுப் பள்ளியில் ஆசிரியராக வேண்டுமா?
Reviewed by Bright Zoom
on
April 03, 2019
Rating:
No comments: