அடுத்தது என்ன படிக்கலாம்...? (பகுதி 1)

அடுத்தது என்ன படிக்கலாம்...?
(பகுதி 1)


💠 பத்தாம் வகுப்பு அல்லது பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு அதன் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருப்பவரா நீங்கள்?

💠 அப்படியெனில், அடுத்து என்ன படிக்கலாம்? என்ற குழப்பமும் உங்கள் மனதில் குடிக்கொண்டிருக்கும்.

💠 மாணவர்களைவிட, அவர்களின் பெற்றோர்களுக்கே, தங்களின் பிள்ளைகளை எந்த துறையில் படிக்க வைக்கலாம் என்ற கவலையும், குழப்பமும் இருக்கும்.

💠 குழப்பங்கள் இருப்பினும், மாணவர்கள் தங்களின் வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்தை தீர்மானிப்பதற்கு சரியான நேரம் இதுதான்..

💠 பல்வேறு துறைகளும் அவற்றைச் சார்ந்த பல்வேறு படிப்புகளும் மாணவர்களை குழப்பமடையச் செய்கின்றன. எனினும், மாணவர்கள், தங்களின் குழப்பங்களை தீர்த்துக் கொண்டால் மட்டுமே அவர்கள் வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும்.

💠 அதற்கு மாணவர்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். அவர்களைப் பற்றி அவர்களே நன்கு சிந்திப்பதுதான். அதாவது, அவர்கள் அதிக ஆர்வம் கொண்ட விஷயங்கள், அவர்களின் பொழுதுபோக்கு, விருப்பமான பாடம், ஆற்றல் ஆகியவற்றை பற்றி நன்றாக சிந்திக்க வேண்டும்.

💠 அதன் பின்னர், அவர்களுக்கு விருப்பமான பாடத்தை மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு, தேர்ந்தெடுக்கும் பாடம் மாணவர்களது ஆர்வத்தையும், பொழுதுபோக்கையும் சார்ந்திருக்குமானால் அது அவர்களுக்கு வெற்றியையும், மனநிறைவையும் பெற்றுத்தரும்.

💠 ஒருவேளை அவர்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பு மாணவர்களின் பெற்றோர் அல்லது நண்பர்களின் தேர்வாக இருப்பின் அது அவர்களுக்கு சுமையாகவே மாறிவிடும்.

💠 ஆகவே, அவரவர் ஆற்றலையும், ஆர்வத்தையும் பொறுத்தே மாணவர்கள் தங்களின் படிப்பை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஒரு படிப்பை தேர்ந்தெடுக்கும் முன்பு மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை :

👉 விருப்பமான துறை

👉 ஆளுமைத்திறன் மற்றும் திறனாய்வுத் திறன்

👉 பலம் மற்றும் பலவீனம்

👉 செயல் வல்லமை (ஊயியடிடைவைல)

👉 தேர்ந்தெடுக்கும் படிப்பை படிப்பதற்கான சாத்தியக்கூறுகள்

👉 தேர்ந்தெடுக்கும் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள்

👉 படிப்பிற்கான நிதி உதவி மற்றும் உதவித்தொகை

💠 இவற்றைக் கொண்டு மாணவர்கள் தங்களது படிப்பை தேர்ந்தெடுத்தால், அவர்களது துறையில் சாதனையாளராக தடம் பதிக்கலாம்.

💠 மாணவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்களிடத்தில் ஒரு விழிப்புணர்வையும் தெளிவையும் ஏற்படுத்த 'அடுத்து என்ன படிக்கலாம்" என்ற தொடரின் மூலம் தினம் ஒரு படிப்பையும் அந்த துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றியும் அறிந்து கொள்வோம்.






அடுத்தது என்ன படிக்கலாம்...? (பகுதி 1) அடுத்தது என்ன படிக்கலாம்...?  (பகுதி 1) Reviewed by Bright Zoom on May 07, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.