உலக வரலாற்றில் இன்று..!
Bright Zoom Today :
★மே 8. (May. - 08 -2019 )
★ கிரிகோரியன் ஆண்டின் 128 ஆம் நாளாகும்.
★நெட்டாண்டுகளில் 129 ஆம் நாள்.
★ஆண்டு முடிவிற்கு மேலும் - 237 நாட்கள் உள்ளன.
★உலக தாலசீமியா நோய் தினம்.
👉 ஒவ்வொரு ஆண்டும் மே 8ஆம் தேதி உலக தாலசீமியா நோய் தினமாகக் கொண்டாடப்படுகிறது. தாலசீமியா என்கிற நோய் குழந்தைகளுக்குப் பிறவியிலேயே ஏற்படக்கூடிய ஒரு நோயாகும். தாலசீமியா பாதித்த குழந்தைக்கு இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும். இதனால்இ அவர்களுக்கு இரத்தச்சோகை ஏற்படும்.
👉 மேலும் சுவாசிக்கும் ஆக்சிஜன்இ நுரையீரலில் இருந்து மற்ற பகுதிக்கு செல்வதில் தடை ஏற்படுகிறது. அதனால்இ மக்களிடம் தாலசீமியா நோய்குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
★ஜீன் ஹென்றி டியூனண்ட் :
🏆 அமைதிக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றவரும்இ செஞ்சிலுவை சங்கத்தை உருவாக்கியவருமான ஜீன் ஹென்றி டியூனண்ட் 1828ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி ஸ்விட்சர்லாந்தில் பிறந்தார். இவரது பிறந்த தினத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும்இ உலக செஞ்சிலுவை தினம் கொண்டாடப்படுகிறது.
🏆 ஒருமுறை சால்ஃபரீனோ என்ற நகருக்கு சென்ற போது வழியில் கொடூரமான போர்க்களக் காட்சிகளைக் கண்டார். அதை பார்த்து மனம் வருந்திய இவர் மக்களோடு இணைந்துஇ காயமடைந்த வீரர்களுக்கு உதவினார்.
🏆 தன் சொந்த ஊரான ஜெனீவாவுக்குத் திரும்பிய பிறகும்கூடஇ இவருக்கு போரும் அதன் அவலங்களும் மட்டுமே நினைவில் நின்றன. அதன் காரணமாக சால்ஃபரீனோ நினைவுகள் (யு ஆநஅழசல ழக ளுழடகநசiழெ) என்ற பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டார்.
🏆 அந்த புத்தகத்தில் உலகில் எங்கு போர் நடந்தாலும்இ காயமடைந்த வீரர்களுக்கு பாரபட்சமின்றி உதவ சர்வதேச அளவில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். என்று குறிப்பிட்டார். பிறகு 1863ஆம் ஆண்டு அந்த அமைப்பான செஞ்சிலுவை சங்கம் உருவாக்கப்பட்டது.
🏆 நோபல் பரிசு தொடங்கப்பட்ட ஆண்டான 1901ஆம் ஆண்டு இவருக்கு முதன்முதலாக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மனிதநேயத்தை உலகம் முழுவதும் பாரபட்சமின்றி உருவாக்கிய இவர் 82வது வயதில் (1910) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள் :
1450 – இங்கிலாந்தில் கென்ட் நகரில் ஆறாம் ஹென்றி மன்னனுக்கெதிராக ஜாக் கேட் என்பவன் தலைமையில் கிளர்ச்சி இடம்பெற்றது.
1821 – கிரேக்க விடுதலைப் போர்: கிரேக்கர்கள் துருக்கியர்களை கிராவியா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தனர்.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைநகராக வேர்ஜீனியாவின் ரிச்மண்ட் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
1886 – ஜோன் பெம்பர்ட்டன் கொக்கா கோலா எனப் பின்னர் பெயரிடப்பட்ட மென்பானத்தைக் கண்டுபிடித்தார்.
1902 – கரிபியன், மார்டீனிக் தீவில் பெலே எரிமலை வெடித்ததில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.
1914 – பராமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
1933 – மகாத்மா காந்தி ஹரிஜன் மக்களின் நலனுக்காக 21-நாட்கள் உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.
1942 – இரண்டாம் உலகப் போர்: கொக்கோஸ் தீவுகளில் நிலைகொண்டிருந்த பிரித்தானிய இலங்கை இராணுவப் பிரிவை சேர்ந்த இராணுவத்தினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இக்கிளர்ச்சி அடக்கப்பட்டு மூவர் தூக்கிலிடப்பட்டனர்.
1945 – அல்ஜீரியாவின் சேட்டிஃப் என்ற இடத்தில் நூற்றுக்காணக்கான அல்ஜீரியர்கள் பிரெஞ்சுப் படைகளினால் கொல்லப்பட்டனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்தனர்.
1984 – லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் விளையாட்டுகளைப் பகிஷ்கரிக்கப்போவதாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது.
2007 – புதிய வட அயர்லாந்து உயர் சபை அமைக்கப்பட்டது.
பிறப்புக்கள்
1828 – ஹென்றி டியூனாண்ட், செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவியவர் (இ. 1910)
1916 – சுவாமி சின்மயானந்தா, இந்திய ஆன்மிகவாதி (இ. 1993)
இறப்புகள்
1947 – ரொபேர்ட் ஹோர்விட்ஸ், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
1951 – மு. நல்லதம்பி, ஈழத்துப் புலவர்
சிறப்பு நாள்
உலக செஞ்சிலுவை நாள்
ஐரோப்பா – வெற்றி நாள் (1945)
தென் கொரியா – பெற்றோர் நாள்
ஐரோப்பா – வெற்றி நாள் (1945)
தென் கொரியா – பெற்றோர் நாள்
உலக வரலாற்றில் இன்று..!மே 8. (May. - 08 -2019 )
Reviewed by Bright Zoom
on
May 08, 2019
Rating:
No comments: