ஆசிரியர் தகுதித் தேர்வு – பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகள் –


ஆசிரியர் தகுதித் தேர்வு – பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகள் – 

💠அரசு வேலை என்ற உங்களது கனவினை நனவாக்கி கொள்ள திறமையாகவும், அதே நேரம் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி என்பது மிக எளிதாக அமைந்துவிடும்.

💠நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து பாடப் பகுதியிலிருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது வெற்றியினை உறுதி செய்யுங்கள்.

💠கொடுக்கப்பட்டுள்ள பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.

💠 அன்னபூரணி புதினத்தைப் படைத்தவர் யார்?

 – க.சச்சிதானந்தன்

💠 ′நாடகவியல்′ எனும் நூலைத் தந்தவர் –பரிதிமாற் கலைஞர்


💠 ′சாகுந்தலம்′ எனும் ஆய்வு நூலைப் படைத்தவர் 

 மறைமலையடிகள்

💠 ′பார்புகழும் பரமார்த்தகுரு கதைகள்′ எனும் நூலின் ஆசிரியர்?

 – எஸ்.இலட்சுமி

💠 ′குறிஞ்சித்திட்டு′ கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்

 – பாரதிதாசன்

💠 ′தமிழ்ப்பசி′ எனும் பாடலின் ஆசிரியர் ————
 – க.சச்சிதானந்தன்

💠 ′கண்ணகி புரட்சிக் காப்பியத்தைப்′ படைத்தவர்
 – பாரதிதாசன்

💠 ′தமிழியக்கம்′ கவிதைத் தொகுதியைத் தந்தவர்? 
– பாரதிதாசன்

💠 ′இளைஞர் இலக்கியம்′ தந்த கவிஞர் யார்? 
பாரதிதாசன்

💠 ′தமிழ்ச் செய்யுட் கலம்பகம்′ எனும் நூலின் ஆசிரியர் 

– ஜி.யு.போப்

💠 ′பண்பை வளர்க்கும் பண்பாட்டுக் கதைகள்′ எனும் கதை நூலின் ஆசிரியர் யார்?

 – பி.எம்.முத்து

💠 ′தாத்தா பாட்டி சொன்ன கதைகள்′ நூலை எழுதியவர்? 

– கழனியூரன்

💠 ′இருண்ட வீடு′ நூலின் ஆசிரியர் யார்?

 –பாரதிதாசன்

💠 ′கொடைக்குணம்′ எனும் சிறுகதையின் ஆசிரியர்? 

– கழனியூரன்

💠 ′தூரத்து ஒளி′ எனும் சிறுகதையின் ஆசிரியர் 

– க.கௌ.முத்தழகர்

💠 ′பிசிராந்தையார்′ நாடகத்தைப் படைத்தவர்?

 – பாரதிதாசன்

💠 ′மரியாதை ராமன் கதைகள்′ நூலை தந்தவர்

 – ஓவியர் ராம்கி

💠 ′சேர தாண்டவம்′ நூலின் ஆசிரியர் யார்? 

– பாரதிதாசன்

💠 ′அக்பர் பீர்பால் நகைச்சுவை கதைகள்′ எனும் நூலை எழுதியவர்

 – க.கௌ.முத்தழகர்

💠 ′நண்பன்′ சிறுகதையின் ஆசிரியர்?

 – ஓவியர் ராம்கி

💠 ′பிரகலாதன்′ என்ற நாடகத்தின் ஆசிரியர்?

 – சங்கரதாஸ் சுவாமிகள்

💠 ′கிராமியக் கதைகள்′ என்ற சிறுகதை நூலின் ஆசிரியர் 

– ஓவியர் ராம்கி

💠 ′வழித்துணை′ என்ற புதுக்கவிதை ஆசிரியர்?

 – ந.பிச்சமூர்த்தி

💠 ′மான விஜயம்′ என்ற நாடக நூலின் ஆசிரியர்?

 – பரிதிமாற் கலைஞர்

💠 ′காவியப்பாவை′ என்ற கவிதை நூலின் ஆசிரியர்? 

 முடியரசன்

💠 ′மனோன்மணீயம்′ என்ற கவிதை நாடகத்தின் ஆசிரியர்? 

பேராசிரியர் சுந்தரனார்

💠 ′மத்தவிலாசம்′ என்ற நாடகத்தின் ஆசிரியர்? 

-மகேந்திரவர்ம பல்லவன்

💠 ′பரமார்த்த குரு′ என்ற சிறுகதையின் ஆசிரியர்? 

வீரமாமுனிவர்

💠 ′பொன்னகரம்′ என்ற சிறுகதையின் ஆசிரியர்? 

புதுமைப்பித்தன்

💠 ′இலவகுசா′ என்ற நாடகத்தின் ஆசிரியர்?

 -சங்கரதாஸ் சுவாமிகள்

ஆசிரியர் தகுதித் தேர்வு – பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகள் – ஆசிரியர் தகுதித் தேர்வு – பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகள் – Reviewed by Bright Zoom on May 12, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.