பொதுத்தமிழ் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு...!


TN Police Exam 2019 : 
பொதுத்தமிழ் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு...!


பொதுத்தமிழ் மாதிரி வினா விடைகள்!!

💥 ‘கற்றறிந்தார்’ – பிரித்து எழுதுக. – கற்று + அறிந்தார்


💥எண் + என்ப – சேர்த்து எழுதுக. –எண்ணென்ப


💥கண் + உடையார் – சேர்த்து எழுதுக. – கண்ணுடையார்


💥மருதூரில் வீற்றிருக்கும் இறைவன் ………….. – சிவபெருமான்


💥மூன்று ஆறுகள் சேருமிடம் ………….. – முக்கூடல்


💥வாய்க்கால் நீரை அடைத்தது யாது? –முத்துகள்


💥விளையாட்டின் அடிப்படை நோக்கம் ………. ஆகும். – போட்டியிடுதல்


💥தமிழரின் தற்காப்புக் கலைகளுள் ஒன்று …………. – சிலம்பாட்டம்


💥சிறுமியர் விளையாடும் விளையாட்டுகள் யாவை? 

 பூப்பறித்தல், கரகரவண்டி, தட்டாங்கல், பல்லாங்குழி, ஊஞ்சல், தாயம்


💥பகாபதம் என்றால் என்ன? 

– ஒரு சொல்லைப் பகுதி, விகுதி முதலிய உறுப்புகளாகப் பகுக்க முடியவில்லை என்றால் அது பகாப்பதம் எனப்படும்.


💥பகுபதம் என்றால் என்ன? 

– ஒரு சொல்லைப் பகுதி, விகுதி முதலிய உறுப்புகளாகப் பகுக்க (பிரிக்க) முடிந்தால் அது பகுபதம் எனப்படும்.


💥ஓரெழுத்து ஒருமொழிக்குச் சான்றுகள் ஐந்து தருக. 

 தை, பை, கை, பூ, தீ


💥பகுபதத்தின் உறுப்புகள் யாவை? 

– பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்


💥சிவபெருமான் விரும்புச் சூடும் பூ ……………. 

– ஊமத்தம் பூ


💥தமிழரின் வீர விளையாட்டு …………. 

– கபடி


💥பகுபத உறுப்புகளின் எண்ணிக்கை ………

 – ஆறு


💥 அரசனைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி .................

 - கோ


💥 தொட்டனைத்து ஊறும் ........... மாந்தர்க்குக்கற்றனைத்து ஊறும் ........... 

மணற்கேணி, அறிவு




💥 தமிழ் எங்கள் ........... 

- உயிர்.


💥 இன்பத் தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல ............ 

- தொண்டு


💥 ‘கதி' 

- பொருள் தருக. - துணை


💥 ‘பேறு' -பொருள் தருக. -

 செல்வம்


💥 'நனி' -பொருள் தருக. 

- மிகுதி


💥 திருத்தக்கத்தேவர் இயற்றிய வேறு நூல் ..............

 - நரி விருத்தம்.


💥 சங்ககாலத்தில் ஓவியங்களை .............. என அழைத்தனர். 

- கண்ணெழுத்து





பொதுத்தமிழ் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு...! பொதுத்தமிழ் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு...! Reviewed by Bright Zoom on May 20, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.