சுற்றுலா படிப்புகள்...!
புவனேஷ்வர், குவாலியர், நொய்டா, கோவா மற்றும் நெல்லூர் ஆகிய இடங்களில் அமைந்திருக்கும் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டூரிசம் அண்ட் டிராவல் மேனேஜ்மெண்ட்’ கல்வி நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலை மேலாண்மை படிப்பிற்கான விண்ணப்பப் பதிவு நடைபெறுகிறது.
படிப்புகள்:
பி.பி.ஏ., - டூரிசம் அண்ட் டிராவல் மேனேஜ்மெண்ட்
எம்.பி.ஏ., - டூரிசம் அண்ட் டிராவல் மேனேஜ்மெண்ட்
தகுதிகள்:
இளநிலை படிப்பிற்குப் பள்ளிப் படிப்பை முடித்தவராகவும், முதுநிலை படிப்பிற்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் துறை சார்ந்த இளநிலை பட்டப்படிப்பும் முடித்திருக்க வேண்டும். மேலும் முதுநிலை படிப்பிற்கு மேட், கேட், சிமேட், எக்ஸாட், ஜிமேட், ஏ.டி.எம்.ஏ., ஆகிய தகுதித் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றை எழுதியிருக்க வேண்டியது அவசியம். இந்த தேர்வுகளை எழுதாதவர்கள், ஐ.ஐ.டி.டி.எம்., நடத்தும் நுழைவுத் தேர்வினை எழுத வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஐ.ஐ.டி.டி.எம்., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் வாயிலாக மட்டுமே மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும்.
சேர்க்கை முறை:
தகுதித் தேர்வு அல்லது நுழைவுத்தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மே 17
விபரங்களுக்கு: www.iittmb.in
சுற்றுலா படிப்புகள்
Reviewed by Bright Zoom
on
May 04, 2019
Rating:
Reviewed by Bright Zoom
on
May 04, 2019
Rating:


No comments: