வேளாண் படிப்பு விண்ணப்ப
பதிவு துவக்கம்...!
கோவை: இளநிலை வேளாண் மாணவர் சேர்க்கைக்கான, ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வரும், 8ம் தேதி துவங்குகிறது.
தமிழ்நாடு வேளாண் பல்கலை, 2019 -20ம் கல்வியாண்டில், 10 பட்டப்படிப்புகளை, 14 உறுப்பு மற்றும் 27 இணைப்புக் கல்லுாரிகள் மூலம் வழங்குகிறது.
கடந்தாண்டு முதல் வேளாண் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படுவதால், இணையதள விண்ணப்ப முறையில் மட்டுமே மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
வேளாண் பல்கலையின், www.tnau.ac.in/admission.html இணையதளத்தில், வரும், 8ம் தேதி முதல் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பதிவு செய்யலாம்.
ஜூன் 7ம் தேதி பதிவேற்றம் செய்ய கடைசி நாளாகும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை பதிவு செய்த பின், விண்ணப்ப கட்டணத்தை இணையதள வங்கி அல்லது டெபிட், கிரெடிட் கார்டு வழியாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பத்தில் பிழை திருத்தம் செய்ய, ஜூன், 10ம் தேதி முதல், 12ம் தேதி வரை, மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.
சிறப்பு ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு,
ஜூன் 11 முதல், 13 வரை நடைபெறும்.
தரவரிசை பட்டியல், ஜூன் 20ல் வெளியிடப்படும்.
இளநிலை சேர்க்கை தொடர்பான தகவல்களுக்கு,
0422 - 6611345 / 6611346 ஆகிய எண்களில் காலை, 9:00 மணி முதல், 5:00 மணி வரை, அனைத்து வேலை நாட்களிலும் தொடர்பு கொள்ளலம்.

வேளாண் படிப்பு விண்ணப்ப பதிவு துவக்கம்...!
Reviewed by Bright Zoom
on
May 04, 2019
Rating:
Reviewed by Bright Zoom
on
May 04, 2019
Rating:

No comments: