TNPSC CCSE-4 தேர்வு 2019 : இன்றைய ( ஜுன் 19) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!
Bright Zoom News
🌈தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகம் மற்றும் உலக நீர்வாழ் உயிரின வளர்ப்பு சங்கத்தின் ஆசிய தொகுப்பு சார்பில் ஆசிய பசிபிக் நீர்வாழ் உயிரின வளர்ப்பு – 2019 என்னும் தலைப்பில், சென்னையில் 3 நாள் கருத்தரங்கம் தொடங்கியது.
🌈அமெரிக்காவில் பூங்காவை கண்காணிக்கும் பணியில் “ஹெச்பி ரோபோகாப்” என்னும் போலீஸ் ரோபோ ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
🌈 ஐ.நா.சபை வெளியிட்டுள்ள உலக மக்கள் தொகை – 2019 என்ற அறிக்கையில், அடுத்த 8 ஆண்டுகளில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில், இந்தியா முதல் இடத்தை பிடிக்கும் என ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது.
🌈 அதிவேகத்தில் 8 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது வீரர் என்ற சாதனையை தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஹசிம் அம்லா படைத்துள்ளார்.
🌈 எரீஸ் எனப்படும் மேஷ விண்மீன் குழாமில் அமைந்துள்ள குறு விண்மீனை சுற்றிவரும் இரு கோள்கள், பூமியை ஒத்த சூழலில் அமைந்துள்ளதாக ஜெர்மானிய விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
🌈 இலங்கையின் முதல் செயற்கைக்கோளான ராவணா-1, 400 கி.மீ. உயரம் மற்றும் 51.6 டிகிரி கோணம் கொண்ட சுற்றுவட்டப்பாதையில் செலுத்தப்பட்டது.
🌈 ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் தீராத நோய் மற்றும் தாங்க முடியாத வலி போன்றவற்றால் அவதிப்படுபவர்களை கருணைக்கொலை செய்வதற்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
🌈 பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள சாம்பர்க் கருத்தரங்கு மையத்தில் வரும் ஜூலை 4-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை 4 நாள்கள் நடைபெறவுள்ளது.
🌈 தெலங்கானா, ஹிமாசலப் பிரதேசம் ஆகிய 2 மாநில உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
TNPSC CCSE-4 தேர்வு 2019 : இன்றைய ( ஜுன் 19) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!
Reviewed by Bright Zoom
on
June 23, 2019
Rating:
No comments: