TNPSC CCSE IV EXAM 2019 பொதுத்தமிழ் இலக்கணம் பற்றிய முக்கிய குறிப்புகள்
இலக்கண குறிப்புகள்!!
☀️வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.
☀️போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.
☀️போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.
☀️TNPSC CCSE IV தேர்வில் பொதுத்தமிழில் 100 என்ற முழுமதிப்பெண்களை பெறுவதற்கு, கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகள் மிக பயனுள்ளதாக அமையும்.
பொதுத்தமிழ் இலக்கண குறிப்புகள்!!
☀️சீர்கள் தொடர்பில் வரும் மோனை சீர்மோனை எனவும், அடிகள் தொடர்பில் வருவது அடிமோனை எனவும் குறிப்பிடப்படுகின்றன.
☀️மோனைத் தொடை தொடர்பில் அடிமோனையை விடச் சீர்மோனையே சிறப்புப் பெறுகின்றது.
☀️ஒரு செய்யுள் அல்லது வாக்கியங்களில் முதலெழுத்து ஒன்றி(ஒரே எழுத்தாக அல்லது ஒரே இன எழுத்தாக)வருவது மோனை ஆகும்.
☀️அடிதோறும் முதற்சீரின் முதலெழுத்து ஒன்றி வருவது அடிமோனை ஆகும்.
☀️ஒரடியில் முதல் இரு சீர்களில் வரும் மோனை இணை மோனை எனப்படும்.
☀️ஒரடியில் முதல் மற்றும் மூன்றாம் சீர்களில் முதலெழுத்து ஒன்றி வரும் மோனை பொழிப்பு மோனை எனப்படும்.
☀️ஒரடியில் முதல் மற்றும் நான்காம் சீர்களில் முதலெழுத்து ஒன்றி மோனை வந்துள்ளது. எனவே, ஒரூஉ மோனை எனப்படும்.
TNPSC CCSE IV EXAM 2019 பொதுத்தமிழ் இலக்கணம் பற்றிய முக்கிய குறிப்புகள்
Reviewed by Bright Zoom
on
June 23, 2019
Rating:
No comments: