முக்கிய நடப்பு நிகழ்வுகள் (23-7-2019)


முக்கிய நடப்பு நிகழ்வுகள் (23-7-2019)

Bright Zoom
பிப்ரவரி 2019
விளையாட்டு

🍀 2019 தாய்லாந்து ஓபன் டென்னிஸ் போட்டியின், மகளிர் ஒற்றையர் பிரிவில் உக்ரைன் வீராங்கனை, டயனா யாஸ்ட்ரிம்ஸ்கா  சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

🍀 ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 17வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் கத்தார் அணியானது, முன்னாள் சாம்பியனான ஜப்பான் அணியை வீழ்த்தி முதன் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 2019 ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் மதிப்புமிக்க வீரராக 'அல்மோஸ் அலி" (கத்தார்) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

🍀 ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற 2019 - டென்னிஸ் போட்டியில், நெதர்லாந்து வீராங்கனை கிக்கி பெர்ட்டன்ஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

🍀 தாய்லாந்தில் நடைபெற்ற இகாட் கோப்பைக்கான சர்வதேச பளுதூக்குதல் போட்டியில், மீராபாய் சானு (இந்தியா - ,மணிப்ப கிலோ எடைப் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

🍀 சர்வதேச குத்துச்சண்டை சங்கம் வெளியிட்டுள்ள உலக குத்துச்சண்டை தரவரிசைப் பட்டியலில், 45 - 48 கி.கி., ′டுiபாவ கடல′ பிரிவில், 1700 புள்ளிகள் பெற்று இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் முதலிடம் பிடித்துள்ளார்.

🍀 எம்.ஆர்.எஃப் சாலஞ்ச் பட்டத்தை வென்ற முதல் பெண் ஓட்டுநர் எனும் பெருமையை இங்கிலாந்தின் ஜாமி சாட்விக் பெற்றுள்ளார். சென்னையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், இவர் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

🍀 கவுகாத்தியில் நடைபெற்ற 83வது 'தேசிய சீனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின்" பெண்கள் ஒற்றையர் பிரிவில், 'சாய்னா நேவால்" சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.

🍀 கவுகாத்தியில் (அசாம்) நடைபெற்ற 83-வது தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் - 2019ஆண்கள் பிரிவில் 'சவுரப் வர்மா " சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

🍀 டோகா (கத்தார்) நகரில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டிற்கான கத்தார் ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டியில், 'எலிஸ் மெர்டென்ஸ்" (பெல்ஜியம்) சிமோனா ஹாஹப்-யை (ருமேனியா) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

🍀 பல்கேரியாவில் நடைபெற்ற ஸ்டெரன்ஜா சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில், இந்தியாவின் நிகாத் ஸ்ரீன்  மகளிர் 51 கிலோ எடைப்பிரிவிலும், மீனா குமாரி தேவி, மகளிர் 54 கிலோ எடைப்பிரிவிலும் தங்கம் வென்றுள்ளனர். மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மஞ்சுராணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

🍀 கவுகாத்தியில் நடைபெற்ற 2019 யுனெக்ஸ் - சன்ரைஸின் மூத்தோருக்கான 83-வது தேசிய பேட்மிண்டன், (இறகுப் பந்து) ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சாம்பியன்ஷிப் பட்டத்தை சவ்ரப் வர்மா வென்றுள்ளார்.

🍀 விளையாட்டுத் துறையில் சிறப்பாக சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் 'லாரஸ் உலகின் சிறந்த விளையாட்டு வீரர் - 2019" விருது  செர்பியாவின் நோவக் ஜோகோவிச் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. லாரஸ் உலகின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருது, ஜிம்னாஸ்டிக் வீராங்கனை 'சைமன் பைல்ஸ்" என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.



முக்கிய நடப்பு நிகழ்வுகள் (23-7-2019) முக்கிய நடப்பு நிகழ்வுகள் (23-7-2019) Reviewed by Bright Zoom on July 23, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.