Bright Zoom Today News செப்டம்பர் 28 காலை நேரச் செய்திகள் ராமேஸ்வரத்தில் பலத்த பாதுகாப்பு - முக்கியச் செய்திகள்..!!

Bright Zoom Today News
செப்டம்பர் 28
காலை நேரச் செய்திகள்

ராமேஸ்வரத்தில் பலத்த பாதுகாப்பு - முக்கியச் செய்திகள்..!!

உலகச் செய்திகள்
டெல்லிக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி :

ஐ.நா. பொதுச்சபையில் பேசிய பின் பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி, அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டார்.
மாநிலச் செய்திகள்
இன்று மகாளய அமாவாசை :

இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு தமிழகம் மற்றும் வடமாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். இதனை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி பாடத்திட்டம் மாற்றம் :

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வின் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, முதல் நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதில் பொது அறிவு வினாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு :

கடலோர மண்டல விதிகளை மீறி கட்டப்பட்ட 4 அடுக்குமாடிக் குடியிருப்புகளை இடித்துத் தள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் 500 அடுக்குமாடி குடியிருப்புவாசிகளுக்கு இடைக்கால நிவாரணமாக தலா 25 லட்சம் ரூபாய் வழங்க கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மழை பாதிப்பு :

தெலுங்கானா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கியது. உத்தரப் பிரதேசத்தில் மழை வெள்ளத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
வேட்பாளர் அறிவிப்பு :

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ரூபி மனோகரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை கட்சித் தலைவர் சோனியாகாந்தி அளித்திருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல்வாஸ்னிக் தெரிவித்துள்ளார்.

இன்று 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு :

தேனி, உதகை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ள நிலையில், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாண்டிய மன்னர் கால கட்டிடங்களின் எச்சங்கள் :

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள முக்காணி தாமிரபரணி ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்ட பாண்டிய மன்னர் கால கட்டிடங்களின் எச்சங்களை லக்னோவில் உள்ள மத்திய அரசு நிறுவன விஞ்ஞானி ஆய்வுக்காக எடுத்து சென்றுள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டி :

கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்சியானில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் காஷ்யப், டென்மார்க் வீரர் ஜன் ஜோர்ஜென்செனை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் காஷ்யப் 24-22, 21-8 என்ற நேர்செட்டில் ஜோர்ஜென்செனை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவர் :

ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் ஐதராபாத்தில் நேற்று நடந்தது. பதிவான 223 வாக்குகளில் அசாருதீன் 147 ஓட்டுகள் பெற்று ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தேர்வு செய்யப்பட்டார்.






Bright Zoom Today News செப்டம்பர் 28 காலை நேரச் செய்திகள் ராமேஸ்வரத்தில் பலத்த பாதுகாப்பு - முக்கியச் செய்திகள்..!! Bright Zoom Today News  செப்டம்பர் 28  காலை நேரச் செய்திகள்    ராமேஸ்வரத்தில் பலத்த பாதுகாப்பு - முக்கியச் செய்திகள்..!! Reviewed by Bright Zoom on September 28, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.