Bright Zoom Today News செப்டம்பர் 30 காலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
செப்டம்பர் 30
காலை நேரச் செய்திகள்

வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு - முக்கியச் செய்திகள் !

உலகச் செய்திகள்
இந்தியாவில் முதலீடு :

இந்தியாவில் பெட்ரோகெமிக்கல் உள்ளிட்ட துறைகளில் ரூ.7 லட்சம் கோடி வரை முதலீடு செய்ய இருப்பதாக சவூதி அரேபியா கூறியுள்ளது.
மாநிலச் செய்திகள்
வந்தே பாரத் ரயில் முன்பதிவு தொடங்கியது :

டெல்லி-கத்ரா இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தனது முதல் வர்த்தக சேவையை வரும் 5ம் தேதி தொடங்குகிறது. டெல்லியில் வரும் 3ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொடியசைத்து ரயிலை தொடங்கி வைக்கிறார். இந்த ரயிலுக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.

இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம் :

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும், வருடாந்திர பிரமோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது.

நவராத்திரி பண்டிகை :

நவராத்திரி பண்டிகையின் முதல் நாளில் (நேற்று) பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் நடத்தப்பட்டன. வடமாநிலங்களில் மக்கள் கார்பா நடனமாடி நவராத்திரியைக் கொண்டாடினர்.

வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ் :

மஹாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 51 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

மத்திய அரசு தடை :

விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக, வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
தென் மாவட்டங்களில் கனமழை :

தென் மாவட்டங்களில் கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு :

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.

பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார் :

சென்னை ஐஐடியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவருக்கு கவர்னர், முதல்வர், அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது தொண்டர்களிடையே பேசிய மோடி, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

தசரா திருவிழா :

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வரும் 8ம்தேதி மகிஷாசூரசம்ஹாரம் நடக்கிறது.

விளையாட்டுச் செய்திகள்
விஜய் ஹஸாரே :

விஜய் ஹஸாரே கோப்பைக்கான குரூப் ஏ பிரிவு ஆட்டம் ஒன்றில் ஹைதராபாத் அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கேரளா. முதலில் ஆடிய கேரளா 50 ஓவர்களில் 227 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய ஹைதராபாத் அணி 44.4 ஓவர்களில் 165 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

தேசிய கார் பந்தயம் :

கோவை, செட்டிபாளையம் பகுதியில் நேற்று நடந்த ஜே.கே.டயர் 22வது தேசிய கார் பந்தயத்தில் சென்னை வீரர் விஷ்ணு பிரசாத் முதலிடம் பிடித்து கோப்பையைக் கைப்பற்றினார்.

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி :

தோஹாவில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100மீ ஓட்டத்தில் 9.76 விநாடிகளில் கடந்து அதிவேக வீரர் என்ற சிறப்பை அமெரிக்காவின் கிறிஸ்டியன் கோல்மேன் பெற்றுள்ளார்.

Bright Zoom Today News செப்டம்பர் 30 காலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  செப்டம்பர் 30  காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on September 30, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.