Bright Zoom Today News செப்டம்பர் 30 மாலை நேரச் செய்திகள்...

Bright Zoom Today News
செப்டம்பர் 30
மாலை நேரச் செய்திகள்...

8 மாவட்டங்களில்... கனமழைக்கு வாய்ப்பு - முக்கியச் செய்திகள் !

உலகச் செய்திகள்
எண்ணெய் விலை உயர்வு - சவூதி எச்சரிக்கை :

ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை உயரும் என சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் எச்சரித்துள்ளார்.

கிளைகளை மூட ஃபார்எவர்-21 நிறுவனம் முடிவு :

ஆன்லைன் நிறுவனங்களுடன் போட்டியிட முடியாததால் உலகில் பல்வேறு நாடுகளில் இருக்கும் கிளைகளை மூட ஃபார்எவர்-21 நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மாநிலச் செய்திகள்
கனமழைக்கு வாய்ப்பு :

புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர், நாகை, சிவகங்கை, மதுரை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வெற்றிகரமாக சோதனை :

உலகிலேயே அதிவேகத்தில் செல்லக்கூடிய சூப்பர்சோனிக் ஏவுகணை எனப் போற்றப்படும் பிரமோஸ், வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் :

மாலத்தீவு, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரி கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

சட்டத்திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டம் :

வயதான பெற்றோரை கைவிட்டால், பிள்ளைகளுக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டுவரவுள்ளது.

மாவட்டச் செய்திகள்
மீண்டும் தடை :

நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
சர்வதேச வாள்வீச்சு போட்டி :

பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற சர்வதேச வாள்வீச்சு போட்டியில் பங்கேற்ற தமிழக வீராங்கனை சி.ஏ.பவானி தேவி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

தரவரிசையில் முன்னேற்றம் :

ஏடிபி சேலஞ்சர் பட்டத்திற்கான டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்ற சுமித் நகால் உலக தரவரிசையில் 26 இடங்கள் முன்னேறி 135வது இடத்தை பிடித்துள்ளார்.

உலக தடகள சாம்பியன் ஷிப் :

உலக தடகள போட்டியின் 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் ஜமைக்கா வீராங்கனை ஷெல்லி அன்பிரேசர் பிரைஸ் 4-வது முறையாக உலக பட்டத்தை வென்றுள்ளார்.

பார்முலா1 கார் பந்தயம் :

ரஷியாவில் நேற்று நடந்த பார்முலா1 கார் பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடத்தை பிடித்துள்ளார்.
Bright Zoom Today News செப்டம்பர் 30 மாலை நேரச் செய்திகள்... Bright Zoom Today News  செப்டம்பர் 30  மாலை நேரச் செய்திகள்... Reviewed by Bright Zoom on September 30, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.