TNPSC - புதிய பாடத்திட்டம்(Group 2,2A)..!!
Bright Zoom Today News
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட புதிய பாடத்திட்டம்(Group 2,2A)..!!
அரசு பணியாளர் தேர்வாணையம், தற்போது டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வில் மொழிப்பாடங்கள் நீக்கப்பட்டு, பாடத்திட்டங்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது.
புதிய பாடத்திட்டத்தின்படி, 175 கேள்விகள் பொது அறிவுக் கேள்விகளாகவும், மீதமுள்ள 25 கேள்விகள் திறனறிவுக் கேள்விகளாகவும் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது.
பழைய முறையில் குரூப் – 2 தேர்வுக்கு, முதல் நிலை தேர்வு 200 மதிப்பெண்களுக்கு மூன்று மணி நேரம் நடத்தப்பட்டது. பொது அறிவு பாடத்தில், பட்டப்படிப்பு அளவில், 75 கேள்விகளும், திறன் அறிதல் தாளில், 10ம் வகுப்பு தகுதியில், 25 கேள்விகளும் கேட்கப்பட்டன.
முதல்நிலை தேர்வு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், குரூப் – 2 தேர்வுக்கு, பழைய முறையில், முதல் நிலை தேர்வு, 200 மதிப்பெண்களுக்கு, மூன்று மணி நேரம் நடத்தப்பட்டது. பொது அறிவு பாடத்தில், பட்டப்படிப்பு அளவில், 75 கேள்விகளும், திறன் அறிதல் தாளில், 10ம் வகுப்பு தகுதியில், 25 கேள்விகளும் கேட்கப்பட்டன.
தமிழ் மற்றும் ஆங்கிலம் தாளில், 10ம் வகுப்பு தகுதி அளவில், 100 கேள்விகள் இடம் பெற்றன. இந்த தாளில், குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண், 90 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
புதிய முறையில், ஏற்கனவே அமலில் இருந்த, தமிழ் மற்றும் ஆங்கில தாள் நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில், பொது அறிவு பாடத்தில், பட்டப்படிப்பு அளவில், 175 கேள்விகள் இடம் பெற உள்ளன.
திறன் அறிதல் தாளில், 10ம் வகுப்பு தகுதியில், 25 கேள்விகள் இடம்பெறும். மூன்று மணி நேரம், இந்த தேர்வு நடக்கும். குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண், 90 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, பிரதான தேர்வு நடத்தப்படுகிறது.
பழைய முறையில், பொது அறிவு தாளில், பட்டப்படிப்பு அளவில், 300 மதிப்பெண்களுக்கு, விரிவாக பதில் எழுத வேண்டும்.இதில், தேர்ச்சி மதிப்பெண்ணாக, 102 நிர்ணயிக்கப்பட்டது.
நேர்முக தேர்வு மற்றும் பதிவேடு தயாரித்தலுக்கு, 40 மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.புதிய முறைப்படி பிரதான தேர்வில், 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கும். கேள்வித்தாளில், முதல் பகுதியில், தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கும், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் மொழிபெயர்க்கும் வகையில், தலா, 25 மதிப்பெண்ணுக்கு, நான்கு கேள்விகள் இடம்பெறும்.
இதில் குறைந்தபட்சம், 25 மதிப்பெண் பெறாதவர்களின், இரண்டாம் பகுதி விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படாது.
இரண்டாம் பகுதியில், 200 மதிப்பெண்களுக்கு, தலா, 20 மதிப்பெண் வீதம், 10 கேள்விகள் இடம்பெறும். இதில், திருக்குறள் குறித்தும், அலுவல் சார்ந்த கடிதம் எழுதுவது குறித்தும், தலா, இரண்டு கேள்விகள் கேட்கப்படும். இந்த பிரிவுக்கு, தனியாக தேர்ச்சி மதிப்பெண் கிடையாது.
இரண்டு தேர்வுகளிலும் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர்; 40 மதிப்பெண்களுக்கு நேர்முக தேர்வு நடக்கும்.
குரூப் - 2A பதவிகளுக்கு, ஏற்கனவே, ஒரே தாளில், 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. தற்போது, குரூப் - 2A தேர்வு, முதல் நிலை மற்றும் பிரதானம் என, இரண்டு தாள்களாக மாற்றப்பட்டுள்ளது.
இனி வரும் நாட்களில், குரூப் - 2 மற்றும் குரூப் - 2a என, இரண்டு வகை பதவிகளுக்கும், முதல் நிலை மற்றும் பிரதான தேர்வு என, இரண்டும் நடக்கும். புதிய தேர்வு முறைப்படி, தமிழும், ஆங்கிலமும் முழுமையாக தெரியாதவர்கள் தேர்ச்சி பெற முடியாது.
அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யுங்கள்!
பாடத்திட்டத்தினை பதிவிறக்கம் செய்ய :இங்கே கிளிக் செய்யுங்கள்!
TNPSC - புதிய பாடத்திட்டம்(Group 2,2A)..!! Bright Zoom Today News
Reviewed by Bright Zoom
on
September 30, 2019
Rating:

No comments: