சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை..! Bright Zoom Today News


சிறுபான்மையினருக்கான
கல்வி உதவித்தொகை...

Bright Zoom Today News

பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க மத்திய/மாநில அரசுகள் பல்வேறு உதவித்தொகைத் திட்டங்களை வழங்கி வருகின்றன. அதன்படி சிறுபான்மை மாணவர்கள் உதவித்தொகை பெறலாம். மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விரும்பும் தகுதியுள்ள சிறுபான்மையின மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், பார்சி, புத்த மற்றும் ஜைன மதத்தைச் சேர்ந்த மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மத்திய, மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிப் படிப்புக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

அதேபோல் 11 முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழில் கல்வி, பாலிடெக்னிக், செவிலியர் அல்லது ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலைப் படிப்புகள் உள்பட) பயிலும் மாணவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலுவோருக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

 ‌w‌w‌w.‌s​c‌h‌o‌l​a‌r‌s‌h‌i‌p‌s.‌g‌o‌v.‌i‌n 

என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

2019-20 ஆம் கல்வி ஆண்டில், தமிழகத்தில் 1,35,127 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. உதவித்தொகை அந்தந்த மாணவர்களின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு மூலம் நேரடியாக செலுத்தப்படும். உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்கும் பள்ளி மாணவர்கள் அக்டோபர் 15ஆம் தேதிக்குள்ளும், பள்ளி மேற்படிப்பு மற்றும் வருவாய் அடிப்படையில் தகுதியான மாணவர்கள் அக்டோபர் 31ஆம் தேதிக்குள்ளும் விண்ணப்பத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, புகைப்படத்துடன்  சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங் களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலரை நேரடியாகத் தொடர்புகொள்ளலாம்.

சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை..! Bright Zoom Today News சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை..!    Bright Zoom Today News Reviewed by Bright Zoom on September 26, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.