TNPSC பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகள்!! Bright Zoom GK

TNPSC பொதுத்தமிழ்
முக்கிய வினா விடைகள்!!
Bright Zoom GK

💥 'பெண்கள் உரிமை பெற்று புது உலகைப் படைக்கவேண்டும்" என்று விரும்பியவர் யார்? - பெரியார்

💥 'ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்" என்னும் வள்ளுவர் வாய்மொழியை நன்குணர்ந்தவர்? - பெரியார்

💥 ஒரு எழுத்து தனித்து நின்றோ, பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது -------- எனப்படும். - சொல்

💥 மொழி எத்தனை வகைப்படும்? - மூன்று

💥 ஒரு சொல் தனித்து நின்று பொருளை உணர்த்துவது ----------- ஆகும். - தனிமொழி

💥 இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் தொடர்ந்துவந்து பொருளை உணர்த்துவது ------ ஆகும். - தொடர்மொழி

💥 தனிமொழிக்கும், தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது? - பொதுமொழி

💥 எழுவாய் செய்யும் செயல் அல்லது தொழிலைக் குறிக்கும் சொற்கள் ------------------- ஆகும். - வினைச்சொற்கள்

💥 தன்பொருளில் முற்றுப்பெற்று வந்துள்ள வினைச்சொற்களை ------- என்பர். -வினைமுற்றுகள்

💥 வினைமுற்று எத்தனை வகைப்படும்? - இரண்டு

💥 செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறனையும் தெரிவித்துக் காலத்தை வெளிப்படையாகக் காட்டுவது --------------- ஆகும். தெரிநிலை வினைமுற்று

💥 கருத்தா ஒன்றனை மட்டும் தெரிவித்துக் காலத்தைக் குறிப்பாகக் காட்டும் வினைமுற்று ------ எனப்படும். - குறிப்பு வினைமுற்று

💥 வினைமுற்றின் (ஆள்) விகுதி குறைந்து நிற்கும் சொல் --------- எனப்படும். - எச்சம்

💥 காலத்தையோ செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியும் எச்சம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? - குறிப்புப் பெயரெச்சம்

💥 முற்றுப்பெறாத வினைச்சொற்கள் வேறொரு வினைமுற்றுக் கொண்டு முடிந்தால், அது ----------- எனப்படும். - வினையெச்சம்

💥 முக்கனி - இலக்கணக் குறிப்பு தருக - தொகைச்சொல்



TNPSC பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகள்!! Bright Zoom GK TNPSC பொதுத்தமிழ்   முக்கிய வினா விடைகள்!!  Bright Zoom GK Reviewed by Bright Zoom on September 24, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.