Bright Zoom Today உலக வரலாற்றில் இன்று ! இயற்கைப் பேரழிவை தடுப்போம்... அக்டோபர் 13

Bright Zoom Today
உலக வரலாற்றில் இன்று !
இயற்கைப் பேரழிவை தடுப்போம்...
அக்டோபர் 13 இன்று இயற்கைப் பேரழிவு குறைப்பு தினம் !

இன்றைய நிகழ்வுகள்
இன்றைய பொன்மொழி
உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம்...

சர்வதேச இயற்கைப் பேரழிவு குறைப்பு தினம்

ஆண்டுதோறும் சர்வதேச இயற்கைப் பேரழிவு குறைப்பு தினம் அக்டோபர் 13ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இத்தினம் ஐ.நா.சபையின் மூலம் 1989ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

புயல், வெள்ளம், பூகம்பம், எரிமலை, சுனாமி, காட்டுத்தீ, கனமழை, சூறாவளி போன்றவை பேரழிவுகளை ஏற்படுத்துகின்றன. இயற்கைப் பேரழிவுகளைத் தடுத்தல், குறைத்தல் மற்றும் இவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுதல் போன்றவற்றின்மீது கவனம் செலுத்தவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

மார்கரெட் ஹில்டா தாட்சர்

இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமரான மார்கரெட் ஹில்டா தாட்சர் 1925ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி இங்கிலாந்தின் லிங்கன் பகுதியில் உள்ள கிரேந்தம் என்னும் இடத்தில் பிறந்தார்.

இவர் இருபதாம் நூற்றாண்டில் நீண்டகாலம் பணியாற்றிய இங்கிலாந்து பிரதமர். இவர் 1979ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக மூன்று முறை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இவர் இங்கிலாந்தின் 'இரும்பு பெண்மணி" என அழைக்கப்பட்டார். இவரால் செயலாக்கப்பட்ட கொள்கைகள் 'தாட்சரிசம்" என அழைக்கப்பட்டது. இவர் 2013ஆம் ஆண்டு மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1911ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி சுவாமி விவேகானந்தரின் முதன்மை சீடரும், சமூக சேவகியுமான சகோதரி நிவேதிதா மறைந்தார்.

1911ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி இந்திய சினிமாவில் புகழ்பெற்ற நடிகர் அசோக் குமார் பீகாரில் உள்ள பாகல்பூரில் பிறந்தார்.

1792ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் டிசியில் வெள்ளை மாளிகை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது.

Bright Zoom Today உலக வரலாற்றில் இன்று ! இயற்கைப் பேரழிவை தடுப்போம்... அக்டோபர் 13 Bright Zoom Today  உலக வரலாற்றில் இன்று !  இயற்கைப் பேரழிவை தடுப்போம்...   அக்டோபர் 13 Reviewed by Bright Zoom on October 13, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.