இன்ஜினீயரிங் படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை... நுழைவுத்தேர்வுக்கு ரெடியா?

இன்ஜினீயரிங் படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை... நுழைவுத்தேர்வுக்கு ரெடியா?

Bright Zoom Jobs

இந்திய அரசின் உயர்பணிகளான இந்திய ஆட்சிப் பணி (Indian Administrative Service), இந்தியக் காவல் பணி (Indian Police Service), இந்திய வருவாய்ப் பணி (Indian Revenue Service) உள்ளிட்ட இந்தியக் குடிமைப் பணிகளுக்கான (Indian Civil Service Examination) தேர்வுகளைப் பற்றி அனைவருக்கும் தெரியும். இதே போன்று, இந்திய அரசின் பொதுத்துறை, தொடருந்துத் துறை, கட்டுமானம், மின்சாரம் மற்றும் தொலைதொடர்புத் துறை போன்ற துறைகளில் இந்திய அரசின் தொழில் நுட்பம் மற்றும் நிர்வாகச் செயல்பாடுகள் இணந்த ஆட்சிப்பணித் தேர்வாக இருந்து வரும் `இந்தியப் பொறியியல் பணி' (Indian Engineering Services) தேர்வுகளைப் பற்றிப் பலருக்குத் தெரிவதில்லை.



Also Read: 1,500 ரூபாய் உதவித்தொகை... கல்லூரி பயிலும்போதே வேலைவாய்ப்பு பயிற்சி... மோடியின் மெகா திட்டம்!

இந்தியக் குடிமைப் பணிகளுக்கான (Indian Civil Service Examination) தேர்வுகளை நடத்தும் இந்திய அரசின் மத்திய தேர்வாணையக் குழுவே (Union Public Service Commission) இந்தியப் பொறியியல் பணி தேர்வையும் நடத்துகிறது. 2020-ம் ஆண்டுக்கான பொறியியல் பணிகள் தேர்வு (Engineering Services Examination-2020) அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

அண்ணா பல்கலைக்கழகம்

பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்களும் (B.E/B.Tech or Equivalent), இயற்பியல் பாடத்தில் முதுநிலைப்பட்டம் (M.Sc Physics) பெற்றவர்களும் இந்திய அரசின் பொதுத்துறைப் பணிகளில் உயர் பணிகளைப் பெற்றிட உதவும் வகையில் அமைந்திருக்கும் இத்தேர்வை எழுதலாம்.

காலியிடங்கள்

2020-ம் ஆண்டுக்கான பொறியியல் பணிகள் தேர்வு அறிவிப்பில், இந்தியா முழுவதும் மொத்தம் 495 பணியிடங்கள் காலியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில்

மாற்றுத் திறனாளிகள் (PwBD)- 21

குறைந்த பார்வையுடையவர்கள் (Low Vision) – 3

இயக்கப்பண்பு குறைபாடுடையவர்கள் (Locomotor Disability) – 11

கேட்புக் குறைபாடுடையவர்கள் (Hard of Hearing) – 7)

என்ற வகையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் ஈடபிள்யூஎஸ் பிரிவினருக்கான இட ஒதுக்கீடுகளும் உண்டு.



Also Read: எல்.ஐ.சி, அரசு இரும்பு ஆலைகளில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்- விண்ணப்பிப்பது எப்படி?

பணி வகைகள்

இந்தியப் பொறியியல் பணிகள் அனைத்தும்

1. Civil Engineering

2.Mechanical Engineering

3.Electrical Engineering

4.Electronics & Telecommunication Engineering

என்று நான்கு வகைப்பாடுகளில் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

Category I — Civil Engineering

Group‐A Services/Posts

(i) Indian Railway Service of Engineers.

(ii) Indian Railway Stores Service (Civil Engineering Posts).

(iii) Central Engineering Service

(iv) Central Engineering Service (Roads), Group‐A (Civil Engineering Posts).

(v) Survey of India Group ‘A’ Service.

(vi) AEE (Civil) in Border Road Engineering Service.

(vii) Indian Defence Service of Engineers.

(viii) AEE (QS&C) in MES Surveyor Cadre.

(ix) Central Water Engineering (Group ‘A’) Service.

(x) Indian Skill Development Service.

Category II — Mechanical Engineering

Group‐A/B Services/Posts

(i) Indian Railway Service of Mechanical Engineers.

(ii) Indian Railway Stores Service (Mechanical Engineering Posts).

(iii) AEE in GSI Engineering Service Gr ‘A’.

(iv) Indian Defence Service of Engineers.

(v) Indian Naval Armament Service (Mechanical Engineering Posts).

(vi) Asstt. Naval Store Officer Grade‐I (Mechanical Engineering Posts) in Indian Navy.

(vii) AEE(Elec & Mech) in Border Roads Engineering Service(Mechanical Engineering Posts).

(viii) Central Water Engineering (Group ‘A’) Service.

(ix) Central Power Engineering Service Gr ‘A’ (Mechanical Engineering Posts).

(x) Indian Skill Development Service.

(xi) Central Power Engineering Service Gr ‘B’ (Mechanical Engineering Posts)

Category III — Electrical Engineering

Group‐A/B Services/Posts

(i) Indian Railway Service of Electrical Engineers.

(ii) Indian Railway Stores Service (Electrical Engineering Posts).

(iii) Central Electrical & Mechanical Engineering Service (Electrical Engineering Posts).

(iv) Indian Defence Service of Engineers.

(v) Asstt. Naval Store Officer Grade‐I (Electrical Engineering Posts) in Indian Navy.

(vi) Central Power Engineering Service Gr ‘A’ (Electrical Engineering Posts).

(vii) Defence Aeronautical Quality Assurance Service/SSO‐II (Electrical).

(viii) Indian Skill Development Service.

(ix) Central Power Engineering Service Gr ‘B’ (Electrical Engineering Posts).

Category IV —Electronics and Telecommunication Engineering

Group‐A/B Services/Posts

(i) Indian Railway Service of Signal Engineers.

(ii) Indian Railway Stores Service (Telecommunication/Electronics Engineering Posts).

(iii) Indian Radio Regulatory Service Gr ‘A’.

(iv) Indian Telecommunication Service Gr ‘A’.

(v) Indian Naval Armament Service (Electronics and Telecom Engineering Posts).

(vi) Asstt. Naval Store Officer Grade‐I(Electronics and Telecom Engg. Posts) in Indian Navy.

(vii) Central Power Engineering Service Gr ‘A’ (Electronics & Telecom Engineering Posts).

(viii) Indian Skill Development Service.

(ix) Junior Telecom Officer Gr ‘B’.

(x) Central Power Engineering Service Gr ‘B’ (Electronics & Telecom Engineering Posts).

கல்வித்தகுதி

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கீழ்க்காணும் ஏதாவதொரு கல்வித்தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

1. பொறியியல் படிப்பில் பல்கலைக்கழகப் பட்டம்

2. இந்தியப் பொறியாளர்கள் நிறுவனத்தின் நிறுவனத் தேர்வுகளில் பிரிவு அ மற்றும் பிரிவு ஆ (passed Sections A and B of the Institution Examinations of the Institution of Engineers (India)) தேர்ச்சி.

3. வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் / கல்லூரி / நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் பட்டம்.

4. இந்திய மின்னியல் மற்றும் தொலைதொடர்புப் பொறியாளர்கள் நிறுவனத்தின் பட்டதாரி உறுப்பினர் தேர்வு (Graduate Membership Examination of the Institution of Electronics and Telecommunication Engineers (India)) தேர்ச்சி.



5. இந்திய வானூர்தி சங்கத்தின் இணை உறுப்பினர் தேர்வில் பகுதி 2 மற்றும் 3 / பிரிவு அ மற்றும் பிரிவு ஆ (passed Associate Membership Examination Parts II and III/Sections A and B of the Aeronautical Society of India) தேர்ச்சி.

6. 1959 ஆம் ஆண்டுக்குப் பிந்தைய லண்டன், மின்னணுவியல் மற்றும் வானொலிப் பொறியாளர்கள் நிறுவனத்தின் பட்டதாரி உறுப்பினர் தேர்வு (passed Graduate Membership Examination of the Institution of Electronics and Radio Engineers, London held after November, 1959) தேர்ச்சி.

7. இந்திய வானொலி ஒழுங்குமுறை சேவை குழு அ (Indian Radio Regulatory Service Group ‘A’) பணிகளுக்கான கம்பியற்ற தொடர்பு மின்னணுவியல், வானொலி இயற்பியல் அல்லது வானொலிப் பொறியியல் பாடத்தில் முதுநிலைப் பட்டம் (M.Sc. degree or its equivalent with Wireless Communication Electronics, Radio Physics or Radio Engineering) அல்லது சிறப்புப் பாடமாக வானொலித் தொடர்பு அல்லது மின்னணுவியல் அல்லது தொலைதொடர்பியல் பாடங்களைக் கொண்டு இயற்பியல் பாடத்தில் முதுநிலைப் பட்டம் (Master’s Degree in Science with Physics and Radio Communication or Electronics or Telecommunication as a special subject.)

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும். 1-1-2020 அன்று 21 வயதுக்குக் குறைவில்லாமலும், 30 வயதுக்கு அதிகமாகாமலும் இருக்க வேண்டும். அதாவது, 2-1-1990 முதல் 1-1-1999 வரையிலான காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். இந்திய அரசின் குறிப்பிட்ட துறைகளில், சில பணிகளில் பணியாற்றுபவர்களுக்கு 35 வயது வரையில் வயதுத் தளர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்த விவரங்கள் தகவல் குறிப்பேட்டில் முழுமையாகத் தரப்பட்டிருக்கின்றன.

உடற்தகுதி

மருத்துவத் தேர்வு மற்றும் உடற்தகுதி

இந்தியப் பொறியியல் பணித் தேர்வுகளுக்கு உரிய மருத்துவத் தேர்வில் தேர்வு பெறுவதுடன் இந்தியப் பொறியியல் பணிகளுக்கான உடற்தகுதியினைப் பெற்றிருக்க வேண்டும். இதுகுறித்த விவரங்கள் தகவல் குறிப்பேட்டில் பின்னிணைப்பாகத் தரப்பட்டிருக்கின்றன. இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பாக அதனையும் ஒரு முறை முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

முதல்நிலைத் தேர்வில் பொதுப்படிப்புகள் மற்றும் பொறியியல் திறன் (General Studies and Engineering Aptitude) பாடங்களைக் கொண்ட தாள் 1 (Paper I) தேர்வுக்கு 200 மதிப்பெண், தொடர்புடைய பொறியியல் பாடப்பிரிவிலான தாள் 2 (Paper II) தேர்வுக்கு 300 மதிப்பெண் என்று மொத்தம் 500 மதிப்பெண்ணுக்கு இரு கொள்குறி வகைத் தேர்வுகள் (Objective Type) நடத்தப்பெறும்

Also Read: 10-ம் வகுப்பு படித்தவர்கள் மாலுமியாகலாம் - உடனே அப்ளை பண்ணுங்க!

விண்ணப்பிக்கும் முறை

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்திய அரசின் மத்திய தேர்வாணையக் குழுவின் www.upsconline.nic.in எனும் இணையதளத்திற்குச் சென்று தகவல் குறிப்பேட்டைத் தரவிறக்கம் செய்து முழுமையாகப் படித்துத் தெரிந்து கொண்டு, விண்ணப்பம் செய்வதற்குத் தேவையான ஆவணங்களைத் தயார் செய்துகொண்டு, அதன் பின்பு விண்ணப்பிக்கலாம். ரூ.200/- விண்ணப்பக் கட்டணம். பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகள் (PWBD) போன்றோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. விண்ணப்பிக்கக் கடைசி நாள் 15-10-2019.

இத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்துத் தகுதியை நிறைவு செய்ய முடியாதவர்கள் 22-10-2019 முதல் 28-10-2019 வரையில் தங்களுடைய விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்தவர்கள் சரியான விண்ணப்பத்தைத் தவிர்த்து பிற விண்ணப்பங்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

தேர்வு முறை

இந்தியக் குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளைப் போன்றே இந்தியப் பொறியியல் பணிகளுக்கான தேர்வும், முதல்நிலைத் தேர்வு (Preliminary / Stage‐I Examination), முதன்மைத் தேர்வு (Main / Stage‐II Examination), ஆளுமைச் சோதனை (Personality Test) தேர்வு என்று மூன்று விதமான தேர்வுகள் நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வில் பொதுப்படிப்புகள் மற்றும் பொறியியல் திறன் (General Studies and Engineering Aptitude) பாடங்களைக் கொண்ட தாள் 1 (Paper I) தேர்வுக்கு 200 மதிப்பெண், தொடர்புடைய பொறியியல் பாடப்பிரிவிலான தாள் 2 (Paper II) தேர்வுக்கு 300 மதிப்பெண் என்று மொத்தம் 500 மதிப்பெண்ணுக்கு இரு கொள்குறி வகைத் தேர்வுகள் (Objective Type) நடத்தப்பெறும்.

முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். முதன்மைத் தேர்வானது பொறியியல் துறை தொடர்புடைய இரு தாள்களைக் கொண்டது. இத்தேர்வில் தாள் ஒவ்வொன்றிற்கும் 300 மதிப்பெண் வீதம் மொத்தம் 600 மதிப்பெண்ணுக்குப் பொதுவான வழக்கத்திலுள்ள முறையிலான (Conventional Type) தேர்வுகளாக நடத்தப்பெறும்.

தேர்வு முறை

மூன்றாவதாக, ஆளுமைச் சோதனை (Personality Test) தேர்வு நடத்தப்பெறும். இத்தேர்வுக்கு முன்பாக, முதல் நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்ணைத் தேர்வாணையக்குழு நிர்ணயிக்கும். அதனடிப்படையில் இரு தேர்வுகளிலும் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றவர்களிலிருந்து காலியாக இருக்கும் இடங்களின் எண்ணிக்கையைப் போல் இரு மடங்கு எண்ணிக்கையில் ஆளுமைச் சோதனைக்கு அழைக்கப்படுவர். ஆளுமைச் சோதனைத் தேர்வுக்கு மொத்தம் 200 மதிப்பெண் வழங்கப்படும்.

மூன்று தேர்வுகளிலும் போட்டியாளர்கள் பெற்ற மதிப்பெண்ணைக் கொண்டு, இறுதியான தரப்பட்டியல் ஒன்று தயாரிக்கப்படும். இத்தரப்பட்டியலில் கிடைக்கப் பெற்ற தரத்தினைக் கொண்டும், இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றியும் போட்டியாளர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த முன்னுரிமைப் பணியிடங்கள் அடிப்படையில் பல்வேறு துறைகளில் பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

தேர்வு மையங்கள்

தேர்வு மையம்

இத்தேர்வுகளில் முதல்நிலைத் தேர்வுக்குத் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை உட்பட இந்தியா முழுவதும் 42 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதன்மைத் தேர்வுக்குத் தமிழ்நாட்டில் சென்னை உட்பட இந்தியா முழுவதும் 24 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இத்தேர்வு மையங்களில் சென்னை, திஸ்பூர் (கௌகாத்தி), கொல்கத்தா மற்றும் நாக்பூர் தவிர்த்த பிற இடங்களில், முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

மின் சேர்க்கைச் சான்றிதழ்

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் தேர்வுகள் தொடங்குவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பாக மின் சேர்க்கைச் சான்றிதழ் (e-Admission Certificate) இந்திய அரசின் மத்திய தேர்வாணையக் குழுவின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இச்சான்றிதழினை விண்ணப்பதாரர்கள் வலைதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் விண்ணப்பப்படிவத்தில், அவர்கள் தொடர்ச்சியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மின்னஞ்சல் முகவரியைத் தெளிவாகக் கொடுத்திட வேண்டும். தேர்வு நாள்கள் உட்பட அனைத்துத் தகவல் தொடர்பும் தேர்வாணையத்திலிருந்து மின்னஞ்சலுக்கே வழங்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.



கூடுதல் தகவல்கள்

இத்தேர்வு குறித்த மேலும் கூடுதல் தகவல்களுக்கு
 www.upsconline.nic.in எனும் இணையதளத்தினைப் பார்வையிடலாம். தேர்வாணையத்தின் தொலைபேசி
 011‐23385271 / 011‐23381125 / 011‐23098543 எனும் எண்களில் அலுவலக வேலை நேரத்தில் தொடர்பு கொண்டும் பெறலாம்.

இன்ஜினீயரிங் படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை... நுழைவுத்தேர்வுக்கு ரெடியா? இன்ஜினீயரிங் படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை... நுழைவுத்தேர்வுக்கு ரெடியா? Reviewed by Bright Zoom on October 13, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.