Bright Zoom Today News அக்டோபர் 03 காலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
அக்டோபர் 03
காலை நேரச் செய்திகள்

உடனடி வங்கிக் கடன் : இன்று முதல் 4 நாட்களுக்கு... மத்திய அரசு உத்தரவு - செய்திகள் !

உலகச் செய்திகள்
ககன்யான் திட்டத்திற்கு உதவும் ரஷ்யா :

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்திற்கு உதவும் வகையில் 4 விண்வெளி வீரர்களுக்கு ரஷ்யா பயிற்சி அளிக்க உள்ளது.

பிரதமர் வருகை :

இந்தியாவிற்கும், வங்காளதேசத்திற்கும் இடையேயான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா இன்று இந்தியா வருகிறார்.

மாநிலச் செய்திகள்
மீண்டும் பாதுகாப்பு :

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இந்திய விமானப்படை தளங்களில் மீண்டும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அரசியல் பிரமுகர்கள் விடுவிப்பு :

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜம்முவில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது :

காலாண்டுத் தேர்வுக்கான விடுமுறை நேற்றுடன் முடிந்ததை அடுத்து தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.

வங்கிக் கடன் :

நாடு முழுவதும் 250 மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு உடனடி வங்கிக் கடன் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது :

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ள ர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக ரூ.244 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ரூ.100 கோடி மதிப்பில் வெள்ளத் தடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரம்மோற்சவம் :

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாள் உற்சவத்தில் குழல் ஊதும் வேணுகோபால கிருஷ்ணர் அலங்காரத்தில் முத்து பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் வீதி உலா வந்தார்.

மாவட்டச் செய்திகள்
கீழடி அகழாய்வுப் பணி :

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வுப் பணிகளை காணவரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நவீன ஸ்மார்ட் வாகனம் அறிமுகம் :

கண்காணிப்பை பலப்படுத்தும் வகையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செக்வேஸ் என்னும் நவீன ஸ்மார்ட் வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
உலக குத்துச்சண்டை போட்டி :

பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி ரஷ்யாவின் உலன் உடே நகரில் இன்று தொடங்க உள்ளது.

புரோ கபடி :

நேற்று நடைபெற்ற புரோ கபடி லீக் போட்டியில் வெற்றி பெற்ற பெங்கள ரு மற்றும் மும்பை அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன.

கிரிக்கெட் போட்டி :

இலங்கை அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது. மேலும் பாகிஸ்தான் அணி ஒரு நாள் கிரிக்கெட் தொடரையும் கைப்பற்றியது.
Bright Zoom Today News அக்டோபர் 03 காலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  அக்டோபர் 03  காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on October 03, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.