Bright. Zoom Today News அக்டோபர் 03 மாலைநேரச் செய்திகள்

Bright. Zoom Today News
அக்டோபர் 03
மாலைநேரச் செய்திகள்

விமானத்தில் ஏறி அமரும் வரை... புதிய சேவை தொடங்கியது - செய்திகள் !

உலகச் செய்திகள்
அமெரிக்கா எச்சரிக்கை :

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எஸ்400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்புகளை கொள்முதல் செய்யவுள்ள நிலையில், அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகளை நட்புறவு மற்றும் கூட்டாளி நாடுகள் மீறக்கூடாது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

உலக வர்த்தக அமைப்பு ஒப்புதல் :

ஐரோப்பிய யூனியனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 7.6 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதிக்க உலக வர்த்தக அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

மாநிலச் செய்திகள்
நமஸ்கார் சேவை :

ஏர் இந்தியா நிறுவனம் தனது விமானங்களில் பயணிப்போருக்கு உதவும் வகையில் டெல்லி விமான நிலையத்தில் நமஸ்கார் சேவை என்னும் புதிய சேவையை தொடங்கியுள்ளது. இந்த சேவையின் கீழ், டெல்லி விமான நிலையத்திற்கு, ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வரும் பயணிகளுக்கு, விமான நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் இருந்து விமானத்தில் ஏறி அமரும் வரையில் ஏர் இந்தியா ஊழியர்களால் சேவை அளிக்கப்படுகிறது.

மழைக்கு வாய்ப்பு :

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும், தென்தமிழகம் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உள்ளதால் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

விரைவு ரயில் சேவை :

டெல்லியில் இருந்து ஜம்மு காஷ்மீரின் கட்ரா பகுதி வரை வந்தே பாரத் விரைவு ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டது. இந்த ரயில் சேவையை உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் இருந்து கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் :

நடப்பாண்டு இறுதிக்குள் விமானத்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 7 முதல் 9 சதவிகிதம் அளவிற்கு அதிகரிக்கும் என்று வான் போக்குவரத்து துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.

மாவட்டச் செய்திகள்
முன்பதிவு தொடக்கம் :

ஆயுதபூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களுக்கான சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

விளையாட்டுச் செய்திகள்
முதல் டெஸ்ட் :

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மயங்க் அகர்வால் இரட்டை சதம் விளாசினார்.

உலக தடகள சாம்பியன் ஷிப் போட்டி :

உலக தடகள சாம்பியன் ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு நடந்தது. இதில் அமெரிக்க வீரர் கிராண்ட் ஹோலோவே முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றார். 22 வயதான அவர் பந்தய தூரத்தை 13.10 வினாடியில் கடந்தார்.

யூரோ சாம்பியன்ஸ் கால்பந்து தொடர் :

யூரோ சாம்பியன்ஸ் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியாவின் சால்ஸ்பர்க் அணிக்கெதிரான போட்டியில் 3-4 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணி த்ரில் வெற்றி பெற்றது
Bright. Zoom Today News அக்டோபர் 03 மாலைநேரச் செய்திகள் Bright. Zoom Today News  அக்டோபர் 03  மாலைநேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on October 03, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.