Bright Zoom Today News அக்டோபர் 08 காலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
அக்டோபர் 08
காலை நேரச் செய்திகள்

பெட்ரோல் விலை... 6வது நாளாக விலை குறைவு - முக்கியச் செய்திகள் !

உலகச் செய்திகள்
நோபல் பரிசு :

2019ஆம் ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வில்லியம் ஜி.கேலின், சர் பீட்டர் ராட்கிளிஃப், கிரேக் எல்.செமன்ஸா ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலச் செய்திகள்
விமானப்படை தினம் :

இந்திய விமானப்படை தினத்தையொட்டி டெல்லியில் தேசிய போர் நினைவுச்சின்னத்தில் முப்படை தளபதிகள் மரியாதை செலுத்தினர். ராணுவ தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பதாரியா, கடற்படை தளபதி கரம்பீர் சிங் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

வரும் 10ஆம் தேதி முதல் :

ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளதால் வரும் 10ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின்சார வாரியம்-திட்டம் :

ஊழியர்களுக்கு வழங்குவதற்காக பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து, 24,629 சிம்கார்டுகள் வாங்க தமிழ்நாடு மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது.

அக்டோபர் 21-ம் தேதி :

அரியானா சட்டசபைக்கு அக்டோபர் 21-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு பா.ஜ.க., காங்கிரஸ், தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் என 1168 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டச் செய்திகள்
சுற்றுலா தலங்கள் மூடப்பட்டது :

பிரதமர்-சீன அதிபர் வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. ஐந்துரதம், கடற்கரை கோவில், அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட இடங்கள் மூடப்பட்டுள்ளன.

குறைந்த பெட்ரோல், டீசல் விலை :

சென்னையில் இன்று தொடர்ந்து 6வது நாளாக விலை குறைந்து, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.76.43 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.70.57 ஆகவும் விற்பனையானது. இன்று, எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பில், பெட்ரோல், லிட்டருக்கு 18 காசும், டீசல் லிட்டருக்கு 11 காசும் குறைந்துள்ளது.

சூரசம்ஹார விழா :

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

தேசிய விருது :

தூய்மை இந்தியா திட்டத்தில் மதுரை ஊராட்சிகளில் தனி ஒருவராக களம் இறங்கி 5,000க்கும் மேற்பட்ட கழிப்பறைகள் கட்டித் தந்த தற்காலிக வட்டார ஒருங்கிணைப்பாளரான செல்விக்கு மத்திய அரசு தேசிய விருது அளித்து கௌரவித்துள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
இந்திய அணி முதலிடம் :

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது.

டி20 கிரிக்கெட் போட்டி :

பாகிஸ்தான் அணிக்கு எதிரான நேற்று நடந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில், 35 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. மேலும் தொடரையும் கைப்பற்றியது.

புரோ கபடி லீக் :

புரோ கபடி லீக் 2019 தொடரில் நேற்று நடந்த ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் எதிரான போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 2 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது.

தமிழில் மிகச்சிறந்த நாட்காட்டியான  நித்ரா நாட்காட்டியை  இலவசமாக  உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள  கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள்   https://goo.gl/XOqGPp

Bright Zoom Today News அக்டோபர் 08 காலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  அக்டோபர் 08  காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on October 09, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.