Bright Zoom Today News அக்டோபர் 09 காலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
அக்டோபர் 09
காலை நேரச் செய்திகள்

4 நாட்களாக போராட்டம்... 48,000 பேர் டிஸ்மிஸ்... முதல்வர் அதிரடி - செய்திகள் !


உலகச் செய்திகள்
கச்சா எண்ணெய் விலை :

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. பேரல் விலை 58 புள்ளி 73 டாலராக உயர்ந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டவட்டம் :

மத்தியக்கிழக்கு நாடான சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகளை விலக்கி கொள்ளும் முடிவில் உறுதியாக இருப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

மாநிலச் செய்திகள்
மத்திய அரசு திட்டம் :

இந்தியாவை சுற்றுச்சூழல் மாசு மற்றும் தார் பாலைவன மணல் சூறைக்காற்றில் இருந்து பாதுகாக்க 1400 கிலோ மீட்டர் தூரத்திற்கு பசுமை அரண் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பிரம்மோற்சவம் :

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற வருடாந்திர பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான நேற்று ஏழுமலையான் கோவில் தெப்பக்குளத்தில் நடைபெற்ற சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர்.

கனமழை பெய்ய வாய்ப்பு :

தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரஃபேல் போர் விமானம் :

பிரான்ஸ் அரசு முதல் ரஃபேல் போர் விமானத்தை முறைப்படி இந்தியாவிடம் நேற்று ஒப்படைத்தது.

அதிரடி நடவடிக்கை :

தெலுங்கானாவில் 4 நாட்களாக போராட்டம் நடத்திய போக்குவரத்துக்கழக ஊழியர் 48 ஆயிரம் பேரை டிஸ்மிஸ் செய்து முதல்வர் சந்திரசேகர ராவ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

மாவட்டச் செய்திகள்
பேருந்துகள் வர தடை :

பிரதமர் மோடி, சீன அதிபர் வருகையையொட்டி மாமல்லபுரம் பேருந்து நிலையத்திற்குள் அரசு பேருந்துகள் வர தடை செய்யப்பட்டுள்ளது. கல்பாக்கம் நோக்கிச் செல்லும் ஈசிஆர் சாலையில் பூஞ்சேரி என்ற இடத்தில் பேருந்துகளை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு :

கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீரால் தென் பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சூரசம்ஹாரம் கோலாகலமாக நடந்தது :

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோலாகலமாக நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
விளையாட்டுச் செய்திகள்
மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி :

ரஷ்யாவில் நடக்கும் 11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று நடந்த 2-வது சுற்றில் இந்தியாவின் மேரி கோம் 5-0 என்ற கணக்கில் தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

தென்னாப்பிரிக்க ஒரு நாள் தொடர் :

இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்தது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா-தென்னாப்பிரிக்கா பெண்கள் அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று நடைபெற்று வருகிறது.






Bright Zoom Today News அக்டோபர் 09 காலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  அக்டோபர் 09  காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on October 09, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.