Bright Zoom Today News அக்டோபர் 10 காலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
அக்டோபர் 10
காலை நேரச் செய்திகள்

முடிவுக்கு வந்தது இலவச அழைப்பு... ஜியோ திடீர் அதிரடி - செய்திகள் !


உலகச் செய்திகள்
அதிபர் சிறிசேனா ஆதரவு :

இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கோத்தபயா ராஜபக்சேவுக்கு அதிபர் சிறிசேனா ஆதரவு தெரிவித்துள்ளார்.
மாநிலச் செய்திகள்
ரிசர்வ் வங்கி நிறுத்தி வைப்பு :

வங்கி சாரா நிதி நிறுவனமான இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ், நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தனியார் வங்கியான லட்சுமி விலாஸ் ஆகியவற்றின் இணைப்புத் திட்டத்தை ரிசர்வ் வங்கி நிராகரித்துள்ளது.

புதுமையான திட்டம் :

சத்தீஸ்கர் மாநிலத்தில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுத்தால் உணவு கொடுக்கும் கார்பேஜ் கேஃப் என்ற உணவகம் தொடங்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 26ம் தேதி விடுமுறை :

தீபாவளி பண்டிகைக்கு முதல் நாளான சனிக்கிழமை விடுமுறை கிடையாது என்று கூறப்பட்ட நிலையில், பெற்றோர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று அக்டோபர் 26ம் தேதி விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் :

தென்மேற்கு பருவக்காற்று ராஜஸ்தானில் இருந்து விலகத் தொடங்கியுள்ளது. அதன் காரணமாக அக்டோபர் 20-ம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு உத்தரவு :

மாவட்ட கலெக்டர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இனி நிமிடத்திற்கு 6 காசுகள் :

ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் போன்களுக்கு பேசினால் அழைப்பு கட்டணமாக இனி நிமிடத்திற்கு 6 காசுகளை நிர்ணயித்து ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
போக்குவரத்து மாற்றம் :

பிரதமர் மோடி, சீன அதிபர் வருகையை முன்னிட்டு சென்னையில் முக்கிய சாலைகளில் அக்டோபர் 11, 12 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி திட்டம் :

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையில் முதல்முறையாக 500 இ-சைக்கிள்களை இயக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
கலந்துக்கொள்ள தடை :

இந்திய தடகள வீராங்கனை நிர்மலா ஷியோரன் ஊக்க மருந்து உட்கொண்டது நிரூபிக்கப்பட்டதால், நான்கு ஆண்டுகளுக்கு தடகளப் போட்டிகளில் கலந்துக்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி :

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேவில் இன்று தொடங்கியது. இதில் இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

புரோ வாலிபால் லீக் :

புரோ வாலிபால் லீக் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி அகமதாபாத், ஐதராபாத், கொச்சி ஆகிய 3 நகரங்களில் போட்டி அரங்கேறுகிறது.

இன்று தொடக்கம் :

தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ராஞ்சியில் இன்று தொடங்கவுள்ளன.






Bright Zoom Today News அக்டோபர் 10 காலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  அக்டோபர் 10  காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on October 10, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.