Bright Zoom Today News
அக்டோபர் 17
காலை நேரச் செய்திகள்
இலவச பொது தொலைபேசி மையங்கள்... அரசு அறிவிப்பு - செய்திகள் !
உலகச் செய்திகள்
வரும் 20ம் தேதி தொடங்குகிறது :
பாகிஸ்தானில் உள்ள சீக்கியர் புனிதத் தலமான கர்த்தார்புருக்கு செல்வதற்கான முன்பதிவு வரும் 20ம் தேதி தொடங்குகிறது.
நிதி ஒதுக்கீடு :
ஜப்பான் நாட்டு பிரதமர் ஷின்சோ அபே, புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க முதல் கட்டமாக 6.5 டாலர்களை நிதியாக ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்.
மாநிலச் செய்திகள்
அபராதம் விதிக்கப்படும் - சுகாதாரத்துறை :
டெங்கு ஒழிப்பு குறித்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளும்போது, கொசுப்புழுக்கள் உருவாவதற்கான காரணிகள் தென்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலவச பொது தொலைப்பேசி மையங்கள் :
பொதுமக்களின் வசதிக்காக காஷ்மீர் முழுவதும் இலவச பொது தொலைப்பேசி மையங்கள் (எஸ்.டி.டி. பூத்) திறக்கப்படும் என மாநில அரசு நேற்று அறிவித்தது.
கனமழை நீடிக்கும் :
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாடத்திட்டத்தை மாற்ற திட்டம் :
புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை மாற்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் விமான சேவை :
தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 36 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் விமான சேவை தொடங்கியது.
மாவட்டச் செய்திகள்
ஆட்சியர் அறிவிப்பு :
மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில், சென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.
சதய விழா :
தஞ்சாவூர் பெரியகோவிலில் நவம்பர் 5, 6ஆம் தேதிகளில் மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாளாகிய 1034-வது சதய விழா நடைபெறவுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
புரோ கபடி :
புரோ கபடியில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டங்களில் தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் அணிகள் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
ஜூனியர் ஹாக்கி போட்டி :
மலேசியாவில் நடந்து வரும் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
விஜய் ஹசாரே டிராபி :
விஜய் ஹசாரே டிராபியில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத்தை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது.

Bright Zoom Today News அக்டோபர் 17 காலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
October 17, 2019
Rating:
No comments: