Bright Zoom Today
அக்டோபர் 18
மாலை நேரச் செய்திகள்

கல்லூரிகளில் மொபைல் பயன்படுத்துவதற்கு தடை... அரசு அதிரடி - செய்திகள் !

உலகச் செய்திகள்
பாகிஸ்தானுக்கு கFATF அமைப்பு இறுதிக்கெடு :

2020ம் ஆண்டு பிப்ரவரிக்குள் பயங்கரவாத நிதியுதவியை கட்டுப்படுத்தாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தானுக்கு FATF அமைப்பு இறுதிக்கெடு விதித்துள்ளது.

மாநிலச் செய்திகள்
பொது நிர்வாகத்துறை அறிவிப்பு :

ஜம்மு-காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதால் அம்மாநில மேலவை கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் :

ஆப்பிள் வணிகம் தொடர்பாக ஜம்மு-காஷ்மீருக்கு வரும் வெளிமாநில வியாபாரிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அடுத்த 24 மணி நேரத்தில் மழை :

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச அரசு தடை :

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மொபைல் பயன்படுத்துவதற்கு உத்தரப்பிரதேச அரசு தடை விதித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு :

தமிழகத்தில் 757 சிறைவாசிகளுக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்க பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

மாவட்டச் செய்திகள்
டெங்கு காய்ச்சல் :

வட சென்னை, வேலூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, தருமபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இரண்டு மணி நேரம் மட்டும் :

தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே, பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்படும் என மாசுக்கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

  சத்யபிரதா சாகு உத்தரவு :

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி நாளை (19.10.2019) மாலை 6 மணியுடன் வெளி நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என சத்ய பிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டி :

கரூர் விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டி வருகின்ற அக்டோபர் 23-ம் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுச் செய்திகள்
வங்காளதேச அணி அறிவிப்பு :

வங்காளதேச அணி இந்தியாவிற்கு வந்து மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. அதற்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

புரோ கபடி :

புரோ கபடி லீக்கில் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காக டெல்லி-பெங்கால் அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன.

கேப்டன் பதவியில் இருந்து நீக்கம் :

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான சர்பராஸ் அகமது அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.


Reviewed by Bright Zoom on October 18, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.