Bright Zoom Today News
அக்டோபர் 19
மாலை நேரச் செய்திகள்
3 லட்சம் ரூபாய்... பொது நிவாரண நிதி... முதல்வர் அறிவிப்பு - செய்திகள் !
உலகச் செய்திகள்
பென்டகன் தெரிவிப்பு :
இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறை சார்ந்த வர்த்தகம் இந்த ஆண்டு இறுதிக்குள் 18 பில்லியன் டாலர்களை எட்டும் என்று அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
டெல்லியில் நடக்கும் கூட்டம் :
சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் பொதுச்சபையின் 91ம் கூட்டத்தை 2022ம் ஆண்டு டெல்லியில் இந்தியா நடத்துகிறது.
உலக ராணுவ விளையாட்டுப் போட்டி :
பல்வேறு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் பங்கேற்கும், 7வது உலக ராணுவ விளையாட்டுப் போட்டி சீனாவில் உள்ள வூகான் நகரில் கோலாகலமாக தொடங்கியது.
மாநிலச் செய்திகள்
4 நாட்களுக்கு மழை தொடரும் :
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
38 சதவீதம் தரமற்றவை :
இந்தியாவில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் பதப்படுத்தப்பட்ட பாலில் 38 சதவீதம் தரமற்றவை என ஆய்வில் தெரியவந்துள்ளது.
நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார் :
அரசு தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
தலா 3 லட்சம் ரூபாய் :
தமிழகம் முழுவதும் நடந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 13 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டச் செய்திகள்
காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் :
காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் அடுத்த கூட்டம் வருகிற அக்டோபர் 31ஆம் தேதி திருச்சியில் நடைபெறுகிறது.
இன்றிலிருந்து கட்டணம் :
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சந்திப்பை தொடர்ந்து, மாமல்லபுரத்தில் இன்றிலிருந்து வெண்ணெய் உருண்டையை காண கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
ஒலிம்பிக் தகுதிச் சுற்று :
ஒடிஷாவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தகுதிச் சுற்று ஹாக்கி போட்டிகளுக்கான இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் அணிகளின் கேப்டனாக மன்பிரீத் சிங், ராணி ராம்பால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விஜய் ஹசாரே டிராபி :
விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரில் நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டங்களில் கர்நாடகா - புதுச்சேரி, டெல்லி - குஜராத் அணிகள் மோதுகின்றன.
3வது டெஸ்ட் :
இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையே நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 58 ஓவரில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்திருந்தபோது மைதானத்தில் போதிய வெளிச்சமின்மையால் போட்டி நிறுத்தப்பட்டது.

Bright Zoom Today News அக்டோபர் 19 மாலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
October 19, 2019
Rating:
No comments: