Bright Zoom Today News அக்டோபர் 18 காலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
அக்டோபர் 18
காலை நேரச் செய்திகள்

மாணவர்களுக்கு புதிய நிபந்தனை... விரைவில் - முக்கியச் செய்திகள் !


உலகச் செய்திகள்
ஜி7 மாநாடு :

ஜி7 மாநாடு புளோரிடா மாகாணத்தில் உள்ள அமெரிக்க அதிபர் டிரம்பின் மியாமி கோல்ப் சுற்றுலா மையத்தில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 10 முதல் 12ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலச் செய்திகள்
வேலைநிறுத்தத்திற்கு 10 தொழிற்சங்கங்கள் ஆதரவு :

நாடு முழுவதும் 22-ந்தேதி நடைபெறும் வங்கி ஊழியர் வேலைநிறுத்தத்திற்கு 10 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

தமிழக அரசு அறிவிப்பு :

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாளை பிரச்சாரம் :

அரியானாவில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி நாளை பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இலவச காஸ் சிலிண்டர் திட்டம் :

பிரதமரின் இலவச காஸ் சிலிண்டர் திட்டம் மூலம் வடகிழக்கு மாநிலங்களில் ரூ.3,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 3000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு புதிய நிபந்தனை :

முதுகலை மருத்துவ மாணவர்கள், இறுதி ஆண்டு தேர்வு எழுதுவதற்கு தகுதி பெற மாவட்ட மருத்துவமனைகளில் 3 மாதங்கள் பணியாற்றி இருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை அமலுக்கு வர உள்ளது.

சின்னங்கள் ஒதுக்கீடு :

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கான சின்னங்களை மாநில தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
ஒருநாள் மட்டும் விடுமுறை :

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கோத்தகிரி, குன்னூர், குந்தா உள்ளிட்ட இடங்களிலும் மண் சரிவும், மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் குந்தா தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை :

கோவை மாவட்டம் பில்லூர் அணை நடப்பு ஆண்டில் 5வது முறையாக முழு கொள்ளளவை எட்டி உள்ளது. பாதுகாப்பு கருதி வினாடிக்கு 30,000 கன அடி நீர் திறக்கப்படுவதால், பவானி ஆற்றங் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று :

14 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது.

ஆஸ்திரேலியா தொடர் :

பாகிஸ்தான் தொடரில் விளையாட மறுத்த இலங்கை வீரர்கள் நான்கு பேர் ஆஸ்திரேலியா தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ளனர்.

கிரிக்கெட் பயிற்சி முகாம் :

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவரான ராகுல் டிராவிட்டின் மேற்பார்வையில் 16 நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்படுகிறது.






Bright Zoom Today News அக்டோபர் 18 காலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  அக்டோபர் 18  காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on October 18, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.