Bright Zoom Today News
காலை நேரச் செய்திகள்
அக்டோபர் 21
15 மாவட்டங்களில்.. கனமழை பெய்யக்கூடும் - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
கர்த்தார்பூர் குருதுவாரா நவம்பர் 9ம் தேதி திறப்பு :
சீக்கியர்களுக்குரிய புனிதத் தலமான கர்த்தார்பூர் குருதுவாரா வரும் நவம்பர் 9ம் தேதி முதல் பொதுமக்களுக்கு திறந்துவிடப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.
மாநிலச் செய்திகள்
அத்துமீறித் தாக்குதல் :
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் சிப்பாய்கள் 10 பேர் பலி ஆனார்கள். 3 பயங்கரவாத முகாம்களும் அழிக்கப்பட்டன.
செயல்திட்டம் :
சீனாவில் இருந்து வெளியேறி இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான செயல்திட்டத்தை தயாரிக்க இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் :
மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் :
தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகம் முழுவதும் பாதுகாப்பு :
தீபாவளி பண்டிகையை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த மாதம் தேர்தல் :
2 மாநகராட்சிகள், 6 நகரசபைகள் உட்பட 14 உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று கர்நாடக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
இடைத்தேர்தல் :
விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர்நகர் தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
பள்ளிகளுக்கு விடுமுறை :
தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி, கோவை, சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று(அக்டோபர் 21) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
விஜய் ஹசாரே :
விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டியில் கர்நாடகா, குஜராத் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் :
ராஞ்சியில் நடந்து வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. ரோகித் சர்மா இரட்டை சதமும், ரஹானே சதமும் விளாசினர்.
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி :
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவை வீழ்த்தி கேரள அணி வெற்றி பெற்றது.

Reviewed by Bright Zoom
on
October 21, 2019
Rating:
No comments: