Bright Zoom today News
அக்டோபர் 22
காலை நேரச் செய்திகள்
எச்சரிக்கை... மேலும் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - செய்திகள் !
உலகச் செய்திகள்
நிலநடுக்கம் :
அந்தமான் அருகே உள்ள நிக்கோபார் தீவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3-ஆக பதிவாகி உள்ளது.
மாநிலச் செய்திகள்
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை :
தமிழகத்தில் உள்ள தேனி, திண்டுக்கல், கோவை மற்றும் நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுத்துள்ள நிலையில் தற்போது மேலும் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
117 கோடி அதிகரிப்பு :
செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 117 கோடியாக அதிகரித்துள்ளது என இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.
ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் :
வங்கி ஊழியர்கள் இன்று நாடு தழுவிய அளவில் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
கனமழை பெய்து வருகிறது :
கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
உள்ள ர் விடுமுறை :
தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமை (அக்டோபர் 28) அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ள ர் விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
டிக்கெட் முன்பதிவு :
தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு 24-ந் தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதற்காக 30 சிறப்பு கவுண்ட்டர்கள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஊதியம் வழங்க பணம் இல்லை :
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க பணம் இல்லை என தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
விழிப்புணர்வு ஊர்வலம் :
வேலூரில் நடந்த அயோடின் பற்றாக்குறை நோய் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.
விளையாட்டுச் செய்திகள்
இந்திய அணி அபார வெற்றி :
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று, தொடரையும் கைப்பற்றியது.
விஜய் ஹசாரே கோப்பை :
நேற்று நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் போட்டியின் காலிறுதி சுற்றில் வெற்றி பெற்ற தமிழகம், சத்தீஸ்கர் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா வருகை :
கொல்கத்தாவில் அடுத்தமாதம் நடைபெறும் இந்திய - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியை காண வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா வரவிருப்பதாக பி.சி.சி.ஐ-யின் தலைவராக தேர்வாகி உள்ள சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

Bright Zoom today News அக்டோபர் 22 காலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
October 22, 2019
Rating:
No comments: