Bright Zoom Today News அக்டோபர் 23 காலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
அக்டோபர் 23
காலை நேரச் செய்திகள்

ரயில்வேயின் அதிரடி அறிவிப்பு... ரூ.18000 கோடி முதலீடு - முக்கியச் செய்திகள் !

உலகச் செய்திகள்
மீண்டும் பிரதமர் :

கனடா நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் பிரதமராகிறார்.

மாநிலச் செய்திகள்
இன்று கனமழைக்கு வாய்ப்பு :

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், 24 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தீவிரமான சீர்திருத்தங்கள் தேவை :

பிரதமர் மோடியை சந்தித்து பேசிய நிலையில், முன்னதாக டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி இந்திய வங்கித்துறையில் தீவிரமான சீர்திருத்தங்கள் தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசு திட்டம் :

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர ஒரே நுழைவுத் தேர்வைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

ரயில்வே நிர்வாகம்-திட்டம் :

பயணிகளுக்கான விரைவு ரயில்களை மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகளுக்காக 18 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது.

அமைச்சரவை கூட்டம் :

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று (அக்டோபர் 23) நடைபெற உள்ளது.

பொதுவிடுமுறை நாட்களின் பட்டியல் அறிவிப்பு :

2020-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என 2020-ம் ஆண்டில் மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

போலீசாருக்கு விருதுகள் :

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கி கௌரவிக்கிறார்.

மாவட்டச் செய்திகள்
வெள்ள அபாய எச்சரிக்கை :

மூன்றாவது முறையாக முழு கொள்ளளவை எட்ட உள்ள மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை தண்ணீர் திறக்கப்பட உள்ளதால், காவிரி கரையோரம் வசிக்கும் 12 மாவட்ட மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு ஏற்படும் அபாயம் :

தொடரும் கனமழையால் நீலகிரி மாவட்டத்தில் 283 இடங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழையால் ஏற்படும் பாதிப்புகளை போக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
இன்று பொறுப்பேற்கிறார் :

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இன்று பொறுப்பேற்கிறார்.

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் :

பிரெஞ்ச் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் பிரிவில் நடந்த ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் மிட்செல் லீயை (கனடா) வீழ்த்தினார்.






Bright Zoom Today News அக்டோபர் 23 காலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  அக்டோபர் 23  காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on October 23, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.