Bright Zoom Today News
அக்டோபர் 25
மாலை நேரச் செய்திகள்
தீபாவளியன்று கனமழைக்கு வாய்ப்பு - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
மீண்டும் முதலிடம் :
உலகின் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாஃப்ட் நிறுவன இணை நிறுவனர் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
மாநிலச் செய்திகள்
மழை பெய்ய வாய்ப்பு :
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது எனவும், வரும் 27ஆம் தேதி ஈரோடு, தருமபுரி, சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், 28, 29ஆம் தேதிகளில் தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களிலும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு :
ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போராட்டம் தொடரும் :
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் சுகாதாரத்துறை செயலாளர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் போராட்டம் தொடரும் என அரசு மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
இலவச பயிற்சி வகுப்புகள் :
சிவில் நீதிபதிகள் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடத்தப்படும் என்று பார் கவுன்சில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
105 கண்காணிப்பு மையங்கள் :
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க மேலும் 105 கண்காணிப்பு மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
அரசுப்பள்ளிகளில் யோகா கலைகள் கற்றுத்தரப்படும் :
அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு யோகா மற்றும் மனவளக்கலைகள் கற்றுத்தரப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தாலிக்கு தங்கம் வழங்கினார்-அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் :
கரூரில் திருமண உதவித் திட்டத்தின் கீழ் 2 ஆயிரம் பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழங்கினார்.
விளையாட்டுச் செய்திகள்
கேன் வில்லியம்சனுக்கு இடமில்லை :
இங்கிலாந்திற்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் கேப்டன் கேன் வில்லியம்சன் சேர்க்கப்படவில்லை என அந்த அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டீட் தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ தலைவர் ஆலோசனை :
பிசிசிஐ தலைவராக பதவி ஏற்றுக்கொண்ட சவுரவ் கங்குலி இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுடன் ஆலோசனை நடத்தினார்.
பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் :
பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சிந்து மற்றும் சாய்னா காலிறுதிக்கு முன்னேறினர்.
ஐ.எஸ்.எல். கால்பந்து :
கொல்கத்தாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஐ.எஸ்.எல். கால்பந்து லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா-ஐதராபாத் எப்.சி. அணிகள் மோதுகின்றன.

Bright Zoom Today News அக்டோபர் 25 மாலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
October 25, 2019
Rating:
No comments: