Bright Zoom Today News மாலை நேரச் செய்திகள் நவம்பர் 04

Bright Zoom Today News
மாலை நேரச் செய்திகள்
நவம்பர் 04

சுகாதார சான்று கட்டாயம்... உணவு பாதுகாப்பு துறை உத்தரவு - செய்திகள் !


உலகச் செய்திகள்
கிழக்காசிய உச்சி மாநாடு :

தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி இந்தியா, சீனா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பான உச்சி மாநாட்டிலும், கிழக்காசிய உச்சி மாநாட்டிலும் இன்று பங்கேற்கிறார்.

விமானங்களின் சேவை தொடங்கியது :

சீனாவில் உள்ள டக்ஸிங் விமான நிலையத்தில் நேற்றுமுதல் சர்வதேச விமானங்களின் சேவை தொடங்கியது.
மாநிலச் செய்திகள்
மழைக்கு வாய்ப்பு :

வெப்பச்சலனம் காரணமாக தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்படும் :

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், தேவைப்பட்டால் தேசிய பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்படும் என உத்தரப்பிரதேச மாநில காவல்துறை டிஜிபி ஓ.பி.சிங் தெரிவித்துள்ளார்.

69 சதவிகித இட ஒதுக்கீடு :

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டாலும், 69 சதவிகித இட ஒதுக்கீடு தொடரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி :

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுகாதார சான்று கட்டாயம் :

தமிழகத்தில் விரைவில் கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்திற்கு சுகாதார சான்று கட்டாயம் என்று உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

மாவட்டச் செய்திகள்
தண்ணீர் திறப்பு :

சென்னையின் குடிநீர் தேவைக்காக திருவள்ள ர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ள சோழவரம் ஏரியிலிருந்து 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

பாசனத்தேவைக்காக கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

நவீன கால்நடைப் பூங்கா :

சேலம் தலைவாசலில் அமையவுள்ள நவீன கால்நடைப் பூங்காவிற்கு ரூ.396 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி :

பிரான்சில் நேற்று நடைபெற்ற பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச், டெனிஸ் ஷபோவலோவை வென்று 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதி சுற்று :

ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதி சுற்று ஹாக்கி போட்டியில் இந்தியாவின் பெண்கள் அணி மற்றும் ஆண்கள் அணி இரண்டுமே அபார வெற்றி பெற்றது.

இறுதி அட்டவணை :

ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டில் நடக்கும் 16 அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இறுதி அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டது.

Bright Zoom Today News மாலை நேரச் செய்திகள் நவம்பர் 04 Bright Zoom Today News  மாலை நேரச் செய்திகள்  நவம்பர் 04 Reviewed by Bright Zoom on November 04, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.