Bright Zoom Today News நவம்பர் 12 மாலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
நவம்பர் 12
மாலை நேரச் செய்திகள்

தமிழக அரசு அதிரடி... இனி இவர்களும் போட்டியிடலாம் - செய்திகள் !


உலகச் செய்திகள்
இரண்டு ரயில்கள் நேருக்கு நேர்
மோதல் :

வங்காளதேசத்தில் பிரமன்பாரியா பகுதியில் இன்று அதிகாலை 3 மணிக்கு தலைநகர் டாக்கா நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில், எதிர் திசையில் சிட்டகாங் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலுடன் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளானது.

மாநிலச் செய்திகள்
குடியரசுத் தலைவர் ஆட்சி :

மராட்டியத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான பலம் எந்தக் கட்சிக்கும் இல்லாததால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பரிந்துரை செய்துள்ளார்.

பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையிலும் மாற்றம் :

எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கான காலத்தை 54 மாதங்களில் இருந்து 50 மாதங்களாக குறைத்துள்ள இந்திய மருத்துவ கவுன்சில், பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையிலும் மாற்றம் செய்துள்ளது. இது தொடர்பான புதிய அறிக்கையை அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மழை தொடரும் :

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரசாணை வெளியீடு :

உள்ளாட்சி தேர்தலில் வாய் பேச முடியாதோர், காது கேளாதோர், தொழு நோயாளிகளும் போட்டியிடலாம் என்று சட்ட திருத்தம் செய்து தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.

உடற்தகுதி தேர்வு :

தமிழகம் முழுவதும் இரண்டாம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வு வரும் 18ஆம் தேதிமுதல் மீண்டும் தொடங்கப்படும் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் தெரிவித்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
புதிய ஏசி பேருந்து :

திருவள்ள ரிலிருந்து திருப்பதி மற்றும் நெல்லூருக்கு 11 புதிய ஏசி பேருந்துகள் இயக்கத்தை அமைச்சர்கள் பாண்டியராஜன் மற்றும் பென்ஜமின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு விருது வழங்கப்பட்டது :

அமெரிக்கா நெபர்வல்லியில் 'மகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ்" பதக்கம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்டது.
விளையாட்டுச் செய்திகள்
சங்க தலைவர்-ஷேன் வாட்சன் :

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கத்தின் தலைவராக முன்னாள் ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி :

வெஸ்ட்இண்டீஸ்-இந்திய பெண்கள் அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கயானாவில் நாளை மறுநாள் நடக்கிறது.





Bright Zoom Today News நவம்பர் 12 மாலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  நவம்பர் 12  மாலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on November 12, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.