Bright Zoom Today News
நவம்பர் 16
காலை நேரச் செய்திகள்
சபரிமலை... பெண்கள்
அனுமதி இல்லை...
மந்திரி அறிவிப்பு - செய்திகள் !
உலகச் செய்திகள்
அதிபர் தேர்தல் :
இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மாநிலச் செய்திகள்
இன்று நடை திறப்பு :
மண்டல பூஜை, மகரவிளக்குக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. ஆனால் தரிசனத்திற்கு பெண்கள் அனுமதிக்கப் படமாட்டார்கள் என்று கேரள தேவசம் போர்டு மந்திரி அறிவித்து உள்ளார்.
சிவசேனாவுக்கு முதல்-மந்திரி :
மராட்டியத்தில் 3 கட்சிகள் அமைக்கும் அரசில் சிவசேனாவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசில் செயல்படுத்த வேண்டிய குறைந்தபட்ச செயல் திட்டம் தயாராகி இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு அவைகளும் கூடும் கூட்டம் :
இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டு 70 ஆண்டுகளான நிலையில் அதனைக் கொண்டாடுவதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடும் கூட்டம் நவம்பர் 26ம் தேதி நடைபெறுகிறது.
குழு அமைப்பு :
ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு இடையே சொத்துக்களைப் பகிர்ந்தளிப்பதற்காக 3 பேர் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஆணை :
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள குதிரையாறு, பாலாறு பொருந்தலாறு அணைகளிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அறிவியல் போட்டிக்கு தேர்வு :
பயோ பிளாஸ்டிக் பொருளை கண்டுபிடித்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி பிளஸ்-2 மாணவி அர்ச்சனா தேசிய அளவிலான அறிவியல் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
இன்று ஒரு நாள் மட்டும் ரத்து :
மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை இன்று ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி :
லண்டனில் நடந்த டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதிக்கு பெடரர் தகுதிபெற்றார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி :
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தையொட்டி மொத்தம் 71 வீரர்கள் அணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சையத் முஸ்தாக் அலி கோப்பை :
சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் திரிபுராவை 79 ரன்களில் கட்டுப்படுத்திய தமிழக அணி அந்த இலக்கை 12.1 ஓவர்களில் எட்டிப்பிடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Bright Zoom Today News நவம்பர் 16 காலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
November 16, 2019
Rating:
No comments: