TNPSC அறிவியல் பொது அறிவு வினா விடைகள்...!

TNPSC அறிவியல்
பொது அறிவு வினா விடைகள்...!

1. நமக்கு சளி மற்றும் காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் சுமார் ---------- நானோ மீட்டர் விட்டம் கொண்டது. - 30

2. பாலி ஸ்டைரின் சிதைவுறுவதற்கு எடுத்துக்கொள்ளும் கால அளவு? - 100 முதல் 10 இலட்சம் ஆண்டுகள்

3. ஒருமுறை மட்டும் பயன்படும் நெகிழிப் பொருள்களை பயன்படுத்தக்கூடாது என்று தமிழ்நாட்டில் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? - 2019, ஜனவரி 1

4. உலகம் முழுவதும் ஒவ்வொரு நிமிடமும் ----------- நெகிழிப் பைகள் பயன்படுத்தப்படுகின்றன. - 20 இலட்சம்

5. Pஏஊ நெகிழிகளை எரிப்பதன் மூலம் வெளியாகும் வேதிப்பொருளின் பெயர் என்ன? - டையாக்சீன்

6. நவீன கரிம வேதியியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? - ப்ரெட்ரிக் ஹோலர்

7. ----------- என்பது நெகிழியை உருவாக்கப் பயன்படும் பலபடிமான பொருளைக் குறிக்கிறது. - ரெசின் குறியீடு

8. புற்றுநோயை ஏற்படுத்தும் நெகிழியின் பெயர் என்ன? - பாலி ஸ்டைரின்

9. ஒரு ஹைட்ரஜன் அணுவின் விட்டம் ---------- நானோ மீட்டர் ஆகும். - 0.2

10. அறுவை சிகிச்சைகளுக்குப் பயன்படும் செயற்கை தோல்களை உருவாக்க ---------------- பயன்படுகிறது. - நானோ தொழில்நுட்பம்

11. மயக்கமூட்டும் வேதிப்பொருள்களில் நிறமற்ற, மணமற்ற, கனிம வாயுவாகச் செயல்படும் மயக்க மருந்து? - நைட்ரஸ் ஆக்சைடு

12. உறுப்புகளை உணர்விழக்கச் செய்யாமல் எல்லா வகையான வலிகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கும் சேர்மங்களே ------------ ஆகும். - வலி நிவாரணிகள்

13. மயக்க மருந்தைக் கண்டுபிடித்தவர் யார்? - வில்லியம் மோர்டன்

14. குயினைன் எனும் மலேரியா நிவாரணி, ---------- என்னும் மரப்பட்டையிலிருந்து பெறப்படுகிறது. - சின்கோனா

15. 1961-ல் கண்டுபிடிக்கப்பட்ட மலேரியா நிவாரணி மருந்து ----------- ஆகும். - பைரிமீத்தமின்



TNPSC அறிவியல் பொது அறிவு வினா விடைகள்...! TNPSC அறிவியல்  பொது அறிவு வினா விடைகள்...! Reviewed by Bright Zoom on November 15, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.