விபத்து நடந்தால் வாகனம் பறிமுதல் தமிழக அரசு அதிரடி - முக்கியச் செய்திகள் !13-12-19



விபத்து நடந்தால் வாகனம் பறிமுதல்
தமிழக அரசு அதிரடி - முக்கியச் செய்திகள் !13-12-19

Bright Zoom செய்திகள்
டிசம்பர் 13
உலகச் செய்திகள்
ஒலிம்பிக் அலைசறுக்கு போட்டி :

2024ம் ஆண்டு ஒலிம்பிக் அலைசறுக்கு போட்டியை, பிரான்ஸ் நாட்டிலுள்ள தஹிடி கடற்பகுதியில் நடத்தலாம் என சர்வதேச அலைசறுக்கு கூட்டமைப்பு பரிந்துரைத்துள்ளது.

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் :

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான ஆளும் கன்சர்வேடிவ் கட்சி அமோக வெற்றிபெற்றுள்ளது.
மாநிலச் செய்திகள்
தமிழக அரசு உத்தரவு :

விபத்து ஏற்படுத்திய வாகனத்திற்கு மூன்றாம் நபர் காப்பீடு இல்லையென்றால், வாகனத்தை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் தொகையை இழப்பீடாக வழங்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

18ம் ஆண்டு நினைவு நாள் :

நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் 18ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

இலாக்கா ஒதுக்கீடு :

மஹாராஷ்டிராவில் ஆட்சி பொறுப்பேற்ற 2 வாரங்களுக்கு பிறகு, அமைச்சர்களுக்கு இலாக்காக்களை அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே ஒதுக்கி உள்ளார் .

ஆயிரக்கணக்கானோர் போராட்டம் :

குடியுரிமை மசோதாவுக்கு எதிராக கொல்கத்தாவில் இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிறுபான்மையினருக்கு எதிரான குடியுரிமை மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய சட்டம் :

ஆந்திராவில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு, 21 நாளில் தூக்கு தண்டனை வழங்கும் புதிய சட்டத்தை அம்மாநில அரசு இயற்றி, சட்டசபையில் நிறைவேற்றியுள்ளது.

மத்திய அரசு திட்டம் :

துவரை, உளுந்து விலை உயரும் வாய்ப்பு உள்ளதால், நியாய விலைக்கடைகள் மூலம், இவற்றை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மிக சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியல் :

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு உள்ள மிக சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம் பெற்றுள்ளார்.
மாவட்டச் செய்திகள்
6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு :

தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உணவு பாதுகாப்பு துறை உத்தரவு :

மதுரையில், சில்லரை எண்ணெய் விற்பனையில் கலப்படத்தை தடுக்க, 2020 ஜூன் முதல் பாக்கெட், கேன், டின்களில் எண்ணெய் விற்க உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

சிறப்பு பேருந்துகள் :

திண்டுக்கல், பழநியில் இருந்து சபரிமலை மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
விளையாட்டுச் செய்திகள்
தீவிர பயிற்சி :

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.

பட்டியல் வெளியீடு :

ஐபிஎல் 2020 ஏலத்தில் கலந்துகொள்ளவுள்ள வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.



விபத்து நடந்தால் வாகனம் பறிமுதல் தமிழக அரசு அதிரடி - முக்கியச் செய்திகள் !13-12-19  விபத்து நடந்தால் வாகனம் பறிமுதல்  தமிழக அரசு அதிரடி - முக்கியச் செய்திகள் !13-12-19 Reviewed by Bright Zoom on December 13, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.