சராசரித் தொடர்பான கணித வினா விடைகள்!!!

Bright Zoom TNPSC - MATHS

சராசரித் தொடர்பான கணித வினா விடைகள்!!!

1. ஒரு விடுதியில் உள்ள 40 மாணவர;களின் சராசரி வயது 14. விடுதி காப்பாளரின் வயதைக் கூட்டினால் சராசரியில் 1 அதிகரிக்கிறது எனில் விடுதி காப்பாளரின் வயது என்ன?

விடை :- 55

தீர்வு:-

40 மாணவர்களின்
  மொத்த வயது = 40 * 14 = 560

41 நபர்களின்
  மொத்த வயது = 41 * 15 = 615

வித்தியாசம் = 55

விடுதி காப்பாளரின் வயது = 55

(விடுதி காப்பாளரை சேர்க்கும் போது மொத்தம் 41 நபர்கள், சராசரி 1 அதிகரிக்கும் போது சராசரி வயது 15 ஆக மாறும்)


2. ஒரு வகுப்பில் உள்ள 34 மாணவர்களின் சராசரி எடை 42கிகி, ஆசிரியரின் எடையைக்கூட்டினால் சராசரியில் 1 அதிகரிக்கிறது எனில்
ஆசிரியரின் எடையைக் காண்க

விடை : 77கிகி

தீர்வு :

34 மாணவர்களின்
மொத்த எடை = 34 * 42 = 1428 கிகி

நபர்களின் மொத்த
எடை = 35 * 43 = 1505 கிகி
வித்தியாசம் = 77AA
ஃ ஆசிரியரின் எடை = 77AA

(ஆசிரியரை சேர்க்கும் போது முத்தம் 35
நபர்கள். சராசரி 1 அதிகரிக்கும் போது சராசரி எடை 43 ஆக மாறும்)

3. ஒரு குழுவில் உள்ள 15 நபர்களில் சராசரி எடை 51 கிகி, குழுவில் இருந்து ஒருவர் விலகுவதினால் சராசரி எடை
குறைகிறது எனில் விலகியவரின் எடையைக்காண்க.

விடை :- 58 கி.கி

தீர்வு :

நபர்களின்
மொத்த எடை =15 * 51 = 765 கி கீ

14 நபர்களின்
மொத்த எடை = 14 * 50.5 = 707 கிகி

வித்தியாசம் =58 கிகி

ஃ விலகியவர் எடை = 58 கிகி

(ஒருவர் விலகும் போது மொத்தம் 14 நபர்கள்,சராசரி எடை0.500 கிகி  குறையும்  போது சராசரி எடை 50.5
ஆக மாறும்)






சராசரித் தொடர்பான கணித வினா விடைகள்!!! சராசரித் தொடர்பான கணித வினா விடைகள்!!! Reviewed by Bright Zoom on December 31, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.