Bright Zoom Today முக்கியச் செய்திகள் ! மாலை நேரச் செய்திகள் டிசம்பர் 12


Bright Zoom Today
முக்கியச் செய்திகள் !
மாலை நேரச் செய்திகள்
டிசம்பர் 12
உலகச் செய்திகள்
சிறந்த நபராக தேர்வு :

பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடிய கிரேட்டா தன்பெர்க்காவை 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த நபராக டைம்ஸ் வார இதழ் தேர்வு செய்துள்ளது.

பயணம் திடீர் ரத்து :

வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் மொமனின் இந்திய பயணம் திடீர் ரத்து செய்யப்பட்டது.
மாநிலச் செய்திகள்
மத்திய அரசு சுற்றறிக்கை :

புதுடெல்லியில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் டிவி சேனல்கள் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தூக்கிலிடும் பணிகள் தீவிரம் :

டெல்லியில் நிர்பயா வழக்கில் வன்கொடுமை கொலை வழக்கின் குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தூக்கு தண்டனையை நிறைவேற்ற சிறப்பு காவலர்கள் உத்தரப்பிரதேசத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை : மண்டல பூஜை :

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் வருகிற 27ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. முன்னதாக தங்க அங்கி ஊர்வலம் வருகிற 23ஆம் தேதி தொடங்குகிறது.

அரசாணை வெளியீடு :

சிபிஎஸ்இ பள்ளிகளிலிருந்து 11-ம் வகுப்பு படித்து வெளியேறிய மாணவர்கள் தமிழக அரசு பாடத்திட்டத்தில் நேரடியாக 12-ம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதலாம் என ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

வாழ்த்து தெரிவிப்பு :

இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நதிநீர் பங்கீடு :

தமிழக - கேரள நதிநீர் பங்கீடு தொடர்பாக இருமாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் குழுவின் முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று சென்னையில் நடைபெற்றது.

விமான சேவை ரத்து :

குடியுரிமை மசோதாவுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில் அஸ்ஸாம் மாநிலத்தில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
கனமழை பெய்யக் கூடும் :

அடுத்த 24 மணி நேரத்தில் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
ரூ.1.5 லட்சம் பரிசு :

தெற்காசிய போட்டிகளில் தங்கம் வென்ற வீரர்-வீராங்கனைகளுக்கு தலா ரூ.1.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

உலக டூர் பேட்மிண்டன் போட்டி :

உலக டூர் பேட்மிண்டன் போட்டியில் இன்று இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சீனாவின் சென் யூ பேவை எதிர்கொள்கிறார்.



Bright Zoom Today முக்கியச் செய்திகள் ! மாலை நேரச் செய்திகள் டிசம்பர் 12 Bright Zoom Today  முக்கியச் செய்திகள் !  மாலை நேரச் செய்திகள்  டிசம்பர் 12 Reviewed by Bright Zoom on December 12, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.