10ஆம் வகுப்பு மாணவர்கள் கணிதப் பாடத்தில் அதிக மதிப்பெண்களைப் பெற....... இப்படி செய்யுங்க....!!
பத்தாம் வகுப்பு கணக்குப் பாட வினாத்தாளில் முதல் பகுதியில் ஒரு மதிப்பெண் வினாக்கள் 14 கேட்கப்படும். அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும். இரண்டாம் பகுதியில் 2 மதிப்பெண் வினாக்கள் 14 கொடுக்கப்பட்டிருக்கும். அதில் 10 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். 28வது வினாவுக்கு கட்டாயமாக விடையளிக்கவும். பகுதி மூன்றில் 5 மதிப்பெண் வினாக்கள் 14 கொடுக்கப்பட்டிருக்கும்.
அதில் 10 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். 42வது வினாவுக்கு கட்டாயமாக விடையளிக்கவும். பகுதி நான்கில் ‘அல்லது’ என்ற வகையில் 8 மதிப்பெண் வினாக்கள் இரண்டு இடம்பெறும். இரண்டு வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும். இதுதான் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ள முறை. இனி நாம் கவனிக்க வேண்டியது அதிக மதிப்பெண் பெறுவதற்கான வழிமுறையைத்தான்.
இதுவரை கணக்குப் பாடத்தை சரியாகப் படிக்காமல் இருந்தால்கூட பரவாயில்லை, இன்றிலிருந்து கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்தால் சுலபமாக 75 மதிப்பெண்கள் வரை பெற்றுவிடும் வழிமுறைகள் கணக்குப் பாடத்தில் உண்டு. புத்தகத்தில் மொத்தம் 8 தலைப்புகள் உள்ளன. அதில் செய்முறை வடிவியல் மற்றும் வரைபடம் ஆகியவற்றில் கடந்த ஆண்டுகளைவிட 4 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது. 20 மதிப்பெண் களுக்குப் பதிலாக 16 மட்டுமே வழங்கப்பட யிருக்கின்றது. இந்த இரண்டு பகுதிகளிலும் கவனம் செலுத்தி பயிற்சி செய்தால் 16 மதிப்பெண்கள் முழுமையாகப் பெற்றுவிடலாம். இதில் வரைபடக் கணக்கில் படம், அளவுத் திட்டம், அளவுகள் சரியாகக் குறிக்கப்படுதல் மற்றும் அட்டவணை மதிப்புகள் இவற்றை சரியாகச் செய்தால் 8 மதிப்பெண்கள் பெற முடியும்.
செய்முறை வடிவியல் பகுதியில் உதவிப் படம் சரியாக வரைந்தால் 2 மதிப்பெண்களும் உண்மைப் படம் சரியாக வரைந்து அளவீடுகள் சரியாகக் குறித்து பெயரிட்டு முழுமையாக்கினால் மீதமுள்ள 6 மதிப்பெண்கள், ஆக முழுமையான 8 மதிப்பெண்கள் பெற்றுவிடலாம். ஆனால், கடந்த ஆண்டுகள் போல் தனித்தலைப்புகளில் இவை இரண்டும் வருவதில்லை. வரைபடங்கள் இயற்கணிதம் என்ற தலைப்பிற்குள்ளும், செய்முறை வடிவியல் என்ற தலைப்பு வடிவியல் என்ற பாடத் தலைப்புக்குள்ளும் அடங்கியுள்ளன.
அடுத்து, 8 பாடத் தலைப்புகளிலும் ஒவ்வொரு பாடத் தலைப்பின் இறுதியிலும் ஒரு மதிப்பெண் வினா விடைகள் 15-20 எண்ணிக்கையில் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த ஒரு மதிப்பெண் வினா - விடை பகுதிகளை தினமும் படித்து, எழுதிப் பார்த்து சிறு தேர்வு போல எழுதிவந்தால் 14 மதிப்பெண்கள் நிச்சயமாகப் பெற்று விடலாம். இதுவரை குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 35-க்கு இவை போதுமானது. ஆனால், இன்னும் கூடுதல் நேரம் ஒதுக்கினால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம்.
எளிய பகுதியும், திரும்பத் திரும்ப கவனம் செலுத்தும் பகுதி உறவுகளும் சார்புகளும், இதில் எடுத்துக்காட்டு கணக்குகள், நிரூபணங்கள் ஆகியவற்றைத் திரும்பத் திரும்ப எழுதிப் பார்க்க வேண்டும். அதனைத் தொடர்ந்து மாணவருக்கு எளிதான பகுதியும் மதிப்பெண் பெறக்கூடியதும் அணிகள், இதில் மிக எளிமையான பயிற்சிக் கணக்குகளும் எடுத்துக்காட்டுகளும் உள்ளன.
இதுவும் இந்த ஆண்டு தனித்தலைப்பில் வரவில்லை. இயற்கணிதம் என்ற தலைப்பில் இணைந்துதான் வருகிறது. ஆனால், அதிலுள்ள காரணிகள், வர்க்க மூலம், பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பெ.வ, மீ.சி.ம, பல்லுறுப்புக் கோவைகளின் வர்க்க மூலம் கண்டறிதல் ஆகியவை மிக எளிய முறையில் பயிற்சி செய்யக்கூடியவையே. அதோடு இரண்டாம் தலைப்பாக வரும் எண்களும் வரிசைகளும் தலைப்பில், மட்டுக் கணிதம், கூட்டுத் தொடர்வரிசை, பெருக்குத் தொடர்வரிசை குறித்த கணக்குகளை உரிய சூத்திரங்களை நினைவில் கொண்டு தொடர்ச்சியாகப் பயிற்சி பெற இந்தப் பகுதி எளிதாகும்.
அடுத்ததாக ஆயத் தொலை வடிவியல் என்ற தலைப்பில், முக்கோணத்தின் பரப்பு, நாற்கரத்தின் பரப்பு, சாய்வு, இணைகோடு செங்குத்துக் கோடுகள், கோட்டின் சமன்பாடுகள் இவற்றைப் பயிற்சி செய்யலாம். அளவியல் தலைப்பில் வளைபரப்பு, கனஅளவு, மொத்தப் பரப்பு - கூம்பு, உருளை, கோளம் இவற்றில் பயிற்சி செய்து பார்க்கலாம். இந்தப் பகுதியைப் பொறுத்தவரை 23 சூத்திரங்கள் உள்ளன. இவற்றை ஒரு மாணவர் தெளிவாகப் புரிந்துகொண்டு கணக்குகளை செய்து பார்ப்பது எளிய முறையில் அதிக மதிப்பெண் பெற வழி வகுக்கும்.
இத்தலைப்பையும் மேற்சொன்ன தலைப்புகளையும் நன்றாகப் பயிற்சி செய்யும் ஒரு மாணவர் எந்தத் தடங்கலுமின்றி 60 மதிப்பெண்கள் வரைப் பெறலாம். அடுத்து நிகழ்தகவு, புள்ளியியல் இவ்விரு தலைப்புகளிலும் கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகள், பயிற்சிக் கணக்குகளையும் சேர்த்து தயாராகும்போது 70 மதிப்பெண்களைக் கடந்த நிலையில் வெற்றி பெறலாம். அதேபோல் வடிவியல் தலைப்பு, இதில்தான் செய்முறை வடிவியலும் இடம்பெற்றுள்ளது. அதோடு பிதாகரஸ் தேற்றம், தேல்ஸ் தேற்றம், எடுத்துக்காட்டுக் கணக்குகள், தொடுகோட்டின் நீளங்கள் இதற்கான புரிதலும் கணக்குகளும் பயிற்சிசெய்ய வேண்டும்.
அடுத்ததாக நிகழ்தகவும் புள்ளியியல் என்ற கடைசித் தலைப்பும் எளிதான பகுதிதான். இதிலுள்ள கணக்குகள் தொடர்ந்து செய்துபார்க்கலாம். முக்கோணவியல், இந்தத் தலைப்பை மாணவர் ஏனோ மிகக் கடினமாக உணர்கின்றனர். ஆனால், இயல்பாக அடிப்படைக் கருத்தை மாணவர் மனதில் புரியவைத்தால் இதைவிட எளியது எதுவுமில்லை. இவ்வாறு ஒரு மாணவர் இனிவரும் டிசம்பர் முதல் மார்ச் வரை 4 மாத காலம் தலைப்பு வாரியாகப் பயிற்சி செய்து வந்தால் 80 முதல் 100 மதிப்பெண்கள் வரை எளிதாகப் பெற இயலும்.
மாணவர்கள் தினமும் 2 மணி நேரம் கணக்குப் பாடத்திற்கு ஒதுக்குவது நல்ல மதிப்பெண் பெற வழி வகுக்கும். ஆம் அந்த நேர உழைப்பு அவர்களுக்குள் வேகமும்தெளிவும் தரும், தேர்வை மிக இயல்பாக அணுகமுடியும். முதலில் கணக்குப் பாடத்தை விரும்பிப் படியுங்கள். வெற்றி பெற வாழ்த்துகள்!

Reviewed by Bright Zoom
on
January 28, 2020
Rating:
No comments: