TNPSC- 2020 Bright Zoom பொது அறிவு - அறிவியல் வினா விடைகள்

TNPSC- 2020 Bright Zoom
பொது அறிவு - அறிவியல் வினா விடைகள்

1. வெப்பம் ஒரு வகை ஆற்றல் என்பதைக் கண்டுபிடித்தவர்

 - ஜேம்ஸ் ஜூல்


2. ஆற்றலின் அலகு என்ன?

 - ஜூல்.


3. அணைக்கட்டில் உள்ள நீர், மேல்நிலைத் தொட்டியில் உள்ள நீர் போன்றவை எவ்வகை ஆற்றலைப் பெற்றுள்ளது?

 - நிலையாற்றல்


4. நகரும் பேருந்து, ஓடும் குதிரை, பாயும் நீர் போன்றவை எவ்வகை ஆற்றலைப் பெற்றுள்ளது?

- இயக்க ஆற்றல்


5. வேதிப்பொருளின் மூலக்கூறுகளுக்கு இடையேயுள்ள வேதிப்பிணைப்புகளில், சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆற்றல் எவ்வகை ஆற்றல்

- வேதி ஆற்றல்


6. மரம், நிலக்கரி, பெட்ரோல் போன்றவற்றை எரிக்கப்படும்போது ஏற்படும் மாற்றத்தால் வெளிப்படுவது ................ ஆற்றலாகும்.

- வேதி


7. மின்கலன்களில் உள்ள .................. ஆற்றல் மின்னாற்றலைத் தருகிறது.

- வேதி


8. எரிபொருள்களில் உள்ள வேதியாற்றல் ............... மற்றும் ................ ஆற்றலாக மாற்றப்படுகிறது.

 - வெப்ப ஆற்றல், ஒளி ஆற்றல்


9. வெப்ப ஆற்றலின் முதன்மையான மூலம் ..............

 - சூரியன்.


10. விறகு மற்றும் எரிவாயுவில் சேமிக்கப்பட்டுள்ள ....................... வெப்ப ஆற்றலாக மாறிக் கிடைக்கிறது.

 - வேதி ஆற்றல்


11. செயற்கைக்கோள்களிலும், கைகடிகாரங்களிலும், கணக்கீட்டுக் கருவிகளிலும் .................... பயன்படுகின்றன.

- சூரிய மின்கலன்கள்


12. தமிழ்நாட்டில் காற்றாலை மூலம் மின்சாரம் கிடைக்கும் இடங்கள்

 - கயத்தாறு (திருநெல்வேலி), ஆரல்வாய்மொழி (கன்னியாகுமரி), கோயம்புத்தூர்


13. சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி உருப்பெருக்கி மூலம் ரோமானிய போர்க்கப்பல்களை எரித்தவர்?

 - ஆர்க்கிமிடிஸ்


14. ஒளிச்சேர்க்கையின் போது, தாவரங்கள், சூரியனிடமிருந்து பெறும் ஒளி ஆற்றலை ........................ ஆற்றலாகச் சேமித்து வைக்கின்றன.

- வேதி


15. எந்த ஓர் ஆற்றல் மாற்றத்திலும், மொத்த ஆற்றலின் அளவு எவ்வாறு இருக்கும்.

 - மாறாமல்

TNPSC- 2020 Bright Zoom பொது அறிவு - அறிவியல் வினா விடைகள் TNPSC- 2020 Bright Zoom  பொது அறிவு - அறிவியல் வினா விடைகள் Reviewed by Bright Zoom on February 12, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.