Bright Zoom Today News
ஏப்ரல் 21. காலை நேரச் செய்திகள்..
முக்கிய செய்திகள்
பக்க விளைவுகள் ஏற்படும்.. மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
தற்காலிகமாக நிறுத்தம் :
அமெரிக்க குடிமக்களின் வேலையை பாதுகாப்பதன் அவசியம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் காரணமாக, அமெரிக்காவில் பிறநாட்டினர் குடியேறுவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான ஆணை கையெழுத்தாக உள்ளது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தம் கையெழுத்தானது :
தென்கொரியாவில் இருந்து 5 லட்சம் கொரோனா சோதனை கிட்டுகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் நேற்று இந்திய தூதரகத்தில் கையெழுத்தானது.
மாநிலச் செய்திகள்
அஞ்சல்துறை துரித நடவடிக்கை :
ஊரடங்கு காரணமாக, முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்கள் உரிய முகவரியில் வசிக்காததால், தமிழகம் முழுவதும் சுமார் 50,000 முதியோர் ஓய்வூதிய மணியார்டர்கள் வழங்கப்படாமல் தேக்கமடைந்துள்ளன. முதியோர்களின் ஓய்வூதியத் தொகையை விரைவாக வழங்க அஞ்சல்துறை துரித நடவடிக்கை எடுத்துள்ளது.
திரும்ப பெற்றது கேரள அரசு :
மத்திய அரசு கண்டித்ததால் கூடுதலாக அறிவித்த தளர்வுகளை கேரள அரசு திரும்ப பெற்றுக் கொண்டது.
மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை :
கொரோனாவை தடுக்க பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையால் பக்க விளைவுகள் ஏற்படும் என மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மழை பெய்ய வாய்ப்பு :
தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் (தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி) இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிறுத்தி வைத்த இன்ஃபோசிஸ் :
கொரோனா தாக்கத்தை அடுத்து இன்ஃபோசிஸ் நிறுவனம் ஆட்சேர்ப்பு, ஊதிய உயர்வுகள், பதவி உயர்வுகள் உள்ளிட்டவற்றை நிறுத்தி வைத்துள்ளது.
இளம் விஞ்ஞானிகள் திட்டம் ஒத்திவைப்பு :
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) சார்பில் நடத்தப்படும் இளம் விஞ்ஞானிகள் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியருக்கு 50 சதவீத ஊதியம் :
தெலுங்கானாவில் கடந்த மாதத்தை போல், இந்த மாதமும் அரசு ஊழியர்களுக்கு 50 சதவீத ஊதியம் மட்டுமே வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
இந்திய மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை :
கொரோனா சிகிச்சையில் உயிரை பணயம் வைத்து பணியாற்றும் மருத்துவர்களின் மீதான தாக்குதல் சம்பவங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐஆயு எனப்படும் இந்திய மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
கிடுகிடுவென உயர்வு :
நாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு டோல்கேட்கள் திறக்கப்பட்ட நிலையில், சுங்க கட்டணம் கிடுகிடுவென உயர்த்தப்பட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
ரூ.3,000 கோடி வர்த்தகம் பாதிப்பு :
கொரோனா வைரஸ் எதிரொலியால், கிருஷ்ணகிரியில் கிரானைட் தொழில் முடங்கியுள்ளதால், ரூ.3,000 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
டென்னிஸ் சங்கம் எச்சரிக்கை :
தனியார் போட்டிகளில் சூதாட்ட தரகர்கள் ஆபத்து காணப்படுவதால் வீரர், வீராங்கனைகளுக்கு உலக டென்னிஸ் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏப்ரல் 21. காலை நேரச் செய்திகள்.. முக்கிய செய்திகள்
Reviewed by Bright Zoom
on
April 21, 2020
Rating:
No comments: