Bright Zoom Today News
ஏப்ரல் 20 காலை நேரச் செய்திகள்
இன்று முதல்.. காலை மற்றும் மதியம்.. இலவச உணவு வழங்கப்படும் - செய்திகள் !
உலகச் செய்திகள்
இத்தாலி அரசு தெரிவிப்பு :
வரும் மே 3ஆம் தேதி ஊரடங்கு முடிந்த பின்னர் கொரோனாவிற்கு எதிரான 2ஆம் கட்ட தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இத்தாலி அரசு தெரிவித்துள்ளது.
மாநிலச் செய்திகள்
இன்று அறிக்கை :
ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, அரசிடம் இன்று அறிக்கை அளிக்கிறது. இதை ஆய்வு செய்து முடிவுகளை முதல்வர் அறிவிப்பார். எனவே மறு உத்தரவு வரும் வரை தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு தடை :
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மின்னணு சாதனங்கள் போன்ற அத்தியாவசியமற்ற பொருட்களை விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.
கோவாவில் 7 பேர் குணம் :
கோவாவில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த 7 பேருமே முழுமையாக குணமடைந்ததால் கொரோனா இல்லாத மாநிலமாக ஆகியுள்ளது.
அவசர ஆலோசனை :
ஊரடங்கால் பிளஸ் 1, பத்தாம் வகுப்பு தேர்வுகளை மே இறுதியில் நடத்துவது குறித்த அவசர ஆலோசனை கூட்டம் கல்வி ஆணையர் தலைமையில் இன்று நடக்கவுள்ளது.
படிவங்களை திருத்தி அமைக்க அரசு முடிவு :
2020-21ம் ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் படிவங்களை திருத்தி அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக நேரடி வரிகள் விதிப்பு வாரியம் தெரிவித்துள்ளது.
உயர் அதிகாரிகள் இன்று முதல்... :
மத்திய அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் இன்று முதல் பணிக்கு திரும்பினார்கள்.
சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை :
மனிதர்களின் மீது கிருமி நாசினி தெளிக்கக்கூடாது என்றும், அவ்வாறு தெளித்தால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பு ஏற்படும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இன்று முதல் செயல்பட அனுமதி :
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் அரசின் கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் செயல்பட அனுமதி வழங்கப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
இன்று மீட்பு விமானங்கள் இயக்கம் :
டெல்லியிலிருந்து பிரிட்டன், பக்ரைன், வங்கதேசம், கொரியா ஆகிய 4 நாடுகளுக்கு இன்று மீட்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
மாவட்டச் செய்திகள்
இலவச உணவு :
சேலம் மாவட்டத்தில் உள்ள 15 அம்மா உணவகங்களிலும் அ.தி.மு.க. சார்பில் இன்று முதல் காலை மற்றும் மதியம் இலவச உணவு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கொரோனா பரிசோதனை :
களத்தில் பணியாற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
கௌதம் கம்பீர் தெரிவிப்பு :
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முன்னதாகவே அந்த்ரே ரஸலை ஏலத்தில் எடுத்திருந்தால் ஐ.பி.எல்-லில் கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு டைட்டில்களை வென்றிருப்போம் என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

Bright Zoom Today News ஏப்ரல் 20 காலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
April 20, 2020
Rating:
No comments: