பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி கட்டுரை ஊடகவியலின் வளர்ச்சியும் தாக்கமும்.


பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி கட்டுரை ஊடகவியலின் வளர்ச்சியும் தாக்கமும்.

முன்னுரை : இன்றைய மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு ஊடகம் துறை மிகவும் பெரிய பங்களித்து வருகிறது அதில்-ஊடகங்கள் - செய்தித்தாள் தொலைக்காட்சி தொலைத்தொடர்பு-இணையம் - சமூக வலைத்தளங்கள்- மற்றும் அவற்றி பயன் பயன்படுத்தும் முறைகள், நன்மைகள், தீமைகள் என பல்வேறு அம்சங்களைப் பற்றி இக்கட்டுரையில் தெளிவாக காண்போம்

ஊடகங்கள்:

ஊடக வளர்ச்சி: ஊடகத்துறை வேகம் பெற்று அறிவியலின் வளர்ச்சியால் இன்று பல்வேறு பரிமாணம் பெற்று உள்ளது. அச்சு ஊடகம், காட்சி ஊடகம் ஆகியன மனித வாழ்வில் இரண்டற கலந்து விட்டன.


செய்தித்தாள்:

நாளேடு, வார இதழ், மாத இதழ், மாதமிருமுறை இதழ் வருடமலர் கல்வி மலர் தொழில் மலர் கணினி மலர் விவசாய மலர் என பல பல பரிணாமங்களில் நம்மை வலம் வருகிறது .

தொலைக்காட்சி:

நமக்குக் காணக் கிடைக்காத காட்சிகளையும் நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துவது தொலைக்காட்சி

தொலைதொடர்புகள்:

தொலைதொடர்பு ஊடகங்கள் வானொலி, தொலைக்காட்சி, பண்பலை, வலைத்தளம், இணையம் எனவும் கிளை விட்டு வளர்ந்து உள்ளது.

இணையம்:

இணையம்  அன்றாட மனித வாழ்வில் தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும் முதன்மை சாதனங்கள் ஆகி விட்டன. தனி மனித வாழ்வை தவிரவும் சமூக பொருளாதார, அரசியல் மற்றும் பண்பாட்டு தளங்களிலும் ஊடகம் முக்கிய காரணியாக திகழ்கிறது.

சமூக வலைத்தளங்களின் பயன் மாற்றம் பயன்படுத்தும் முறை:

வாட்ஸ்அப் ,ஃபேஸ்புக் , இன்ஸ்டாகிராம் ட்விட்டர் , யூடியூப், போன்ற சமூகவலைதளங்கள் மனித குலத்திற்கு பெரும் பங்காற்றி வந்தாலும் இந்த சமூக வலை தளங்களில் பல தவறான பொய்யான செய்திகளும் இடம் பெறுவதை தவிர்க்க இந்திய இணைய கட்டுப்பாடு அமைப்பான டிராய்
கட்டுப்பாட்டிர்க்கு இணங்கி நல்ல செய்திகளை மட்டுமே பரப்புவோம்


ஊடக வளர்ச்சியின் நன்மைகள்:

இன்றைய ஊடக வளர்ச்சியின் மிக முக்கிய நன்மை யாதெனில் -

"விரும்பிய தகவலை" கால விரயம் இன்றி உடனே பெற முடிதல்

Discovery அலைவரிசையில் தமிழ் ஒளிபரப்பானது உயிரினங்களை பற்றியும், தொழில் நுட்ப வளர்சிகளையும் சாமானியருக்கும் புரியும் வண்ணம் படைகின்றன . மேலும் தஞ்சை பெரிய கோவில் பற்றிய செய்தி தொகுப்பு போன்றவை நமது பெருமிதங்களை தக்கவாறு உணர வழி செய்கின்றது .

நிலவியல் அமைப்பினை எளிதில் அறிய "கூகுள் எர்த் " பெரிதும் பயன்படுகிறது.

உலகின் பல்வேறு திசைகளின் நிகழ்வுகளை சமகாலத்தில் தாமதமின்றி துல்லியமாக அறிய ஊடக வளர்ச்சி பெரிதும் பயன் தரவல்லது.

குறைகள்/ தீமைகள்:

ஊடகத்தின் அபரிதமான வளர்ச்சியில் நிறைகள் பல இருபினும் சில குறைகளும் உள்ளன. அவைகளை கீழே பட்டியலில் பார்ப்போம்.

★ ஊடகங்களில் "நடுநிலைமை" என்பது அறவே அற்று போய்விட்டது.

★ சார்புத்தன்மை செய்திகள் உருவாக்கபடுகின்றன.

★ இணையத்தில் "சாட்டிங்" ல்  60 % பாலியல் தொடர்பான விவாதங்களே நடை பெறுகின்றன.

★ இணைய குற்றங்கள் - "சைபர் க்ரைம்" நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

★ காட்சி ஊடகங்கள் குழந்தைகளை நுகவோர்களாக மாற்றிவிட்டன.

★ மாரடைப்பு, ரத்த கொதிப்பு போன்ற "ஆண்களின் நோயாக" அடையாளம் காண பட்டவை ஊடக தாக்குதலால் பெண்களுக்கும் உரிய நோய்க் காரணியாகி விட்டது.

★ விளம்பரம் மற்றும் வியாபார நோக்கமானது அறம், நேர்மை, துணிவு, போன்ற தனிமனித உயர்குணங்களை ஊடக துடைத்து எறிந்து வருகிறது.

★ "Paid News "  எனப்படும் விளம்பரத்தையே செய்தியாக போடும் செயல் ஒரு புதிய சீரழிவாக ஊடகத்துறையை ஆட்கொள்ள துவங்கி இருக்கிறது.


முடிவுரை.

எல்லைகள் இன்றி மனித சமூகத்தின் பாலும், இயற்கை மற்றும் இவ்வுயிர் கோள வாழினங்கள் மீதும் அளவற்ற நேசிப்பும் அதன் நலன்பால் சார்ந்த உந்துதலும், இவற்றின் உரிமைகள் காக்கப்படுவதற்கும், மீட்கப்படுவதற்கும் அறத்தின் மீது நம்பிக்கையும், பற்றுறுதியும் கொண்ட ஊடகங்கள் உருவாக வேண்டும். அதில் கள பணியாற்றிட நல்ல அறிவும் நன்னடத்தையும் போர்க்குணமும் கொண்ட ஊடகவியலார்கள் முன்னிற்க வேண்டும். இவ்வகைப் பட்ட ஒருங்கிணைவு கொண்ட அமைப்பை ஆதரிக்க மக்கள் திரள் உறுதியேற்க வேண்டும்

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி கட்டுரை ஊடகவியலின் வளர்ச்சியும் தாக்கமும்.  பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி கட்டுரை ஊடகவியலின் வளர்ச்சியும் தாக்கமும். Reviewed by Bright Zoom on April 11, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.