Bright Zoom Today ஏப்ரல் 11மாலை நேரச் செய்திகள் சிறப்பு திட்டத்தை அறிவிக்க... தமிழக முதல்வர் வேண்டுகோள் - செய்திகள் !
Bright Zoom Today
ஏப்ரல் 11மாலை நேரச் செய்திகள்
சிறப்பு திட்டத்தை அறிவிக்க... தமிழக முதல்வர் வேண்டுகோள் - செய்திகள் !
உலகச் செய்திகள்
250 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு :
சிங்கப்பூரில் சுமார் 250 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுக்கான இந்திய தூதர் ஜாவீத் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.
ஒபெக் கூட்டமைப்பு முடிவு :
கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒபெக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதனால் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது.
மாநிலச் செய்திகள்
சிறப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும் :
தமிழகத்தில் வேளாண்மைத்துறைக்கு சிறப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி முடிவு :
ஊரடங்கை நீட்டிப்பது என்று பிரதமர் மோடி முடிவெடுத்துள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை :
கொரோனா நிலவரம் குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.
கொரோனா தொடர்பாக எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில முதல்வர்களிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மாநில முதல் மந்திரிகள் அறிவுறுத்தல் :
கொரோனா வைரஸ் பரவலின் வேகம் குறையாததால், ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநில முதல் மந்திரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தனியார் மருத்துவமனைகளுக்கு வாய்ப்பு :
பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளை சேர்க்கும் திட்டத்தை தேசிய நலவாழ்வு ஆணையம் தொடங்கியுள்ளது.
மழை பெய்ய வாய்ப்பு :
வெப்ப சலனம் காரணமாக தென் தமிழகத்தில் தேனி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேர்முகத் தேர்வு :
ரயில்வே மருத்துவமனையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக பணிபுரிய மருத்துவர்கள், இதர மருத்துவப்பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் 3 மாதத்திற்கு பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
அமித்ஷா உத்தரவு :
பாகிஸ்தான், வங்காளதேசத்துடனான எல்லையில் குறிப்பாக வேலி இல்லாத பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டச் செய்திகள்
விரைவில் வண்ண பாஸ்கள் :
தேவையில்லாமல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதைத் தடுக்கும் நோக்கத்தில் சென்னையிலும் விரைவில் வண்ண பாஸ்கள் வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
பிபா தலைவர் வேண்டுகோள் :
கொரோனா வைரஸின் தாக்கம் முழுமையாக சீராகும் முன்பே அவசரப்பட்டு கால்பந்து லீக் போட்டிகளை தொடங்கி விட வேண்டாம் என்று பிபா தலைவர் கியானி இன்பான்டினோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Reviewed by Bright Zoom
on
April 11, 2020
Rating:
No comments: