Bright Zoom Today(ஏப்ரல் 13)
மாலை நேரச் செய்திகள்
தமிழகத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - செய்திகள்..!!
உலகச் செய்திகள்
மருத்துவர்களுக்கு நன்றி :
ரஷ்யாவின் யால்டா பகுதியில் உள்ள தாவரவியல் பூங்கா சார்பில் கொரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, 100-க்கும் மேற்பட்ட துலிப் மலர்கள் பரிசளிக்கப்பட்டன.
மாநிலச் செய்திகள்
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு :
தமிழகத்தில் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பால் அரிசி அட்டைதாரர்களுக்கு மே மாத அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பால் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மேலும் 1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
முதல்வர் வாழ்த்து தெரிவிப்பு :
நாளை தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதல்வர் இபிஎஸ், மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் இணைந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு உத்தரவு :
இந்தியாவில் உள்ள வெளிநாட்டவர்களின் விசா காலத்தை ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாளை காலை 10 மணிக்கு :
இந்தியாவில் நாளையுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் நாட்டு மக்களுடன் நாளை காலை 10 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். ஊரடங்கை நீட்டிப்பது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விடை கொடுத்த மத்திய அமைச்சர்கள் :
பிரதமர் மோடியின் உத்தரவை ஏற்று, 'வீட்டில் வேலை" நடைமுறைக்கு விடை கொடுத்து விட்டு மத்திய அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் இன்று அலுவலகங்களுக்கு வந்து பணிகளை கவனித்தனர்.
தமிழக அரசு உத்தரவு :
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக கா.பாலச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாவட்டச் செய்திகள்
கனி காணும் நிகழ்ச்சி ரத்து :
கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் குமரி மாவட்ட கோவில்களில் நாளை நடைபெற இருந்த கனி காணும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
வழிமுறையில் மட்டும் மாற்றம் :
தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு உதவி செய்யலாம். அதற்கு தடை விதிக்கவில்லை எனவும், மேலும் வழிமுறையில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனவும் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
மாற்று வீரராக இருப்பார் :
டி20 உலகக் கோப்பை போட்டியில் தோனிக்கு பதிலாக கே.எல்.ராகுல் சரியான மாற்று வீரராக இருப்பார் என்று கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

Bright Zoom Today(ஏப்ரல் 13) மாலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
April 13, 2020
Rating:
No comments: