Bright Zoom Today News
ஏப்ரல் 14 மாலை நேரச் செய்திகள்
ஊரடங்கை மே 3 வரை நீட்டிப்பு செய்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.
மே 3ஆம் தேதி வரை.. விமானப் போக்குவரத்து முழுமையாக ரத்து - செய்திகள்..!!
உலகச் செய்திகள்
சீன அரசு தடை :
கொரோனா வைரஸ் எங்கே தோன்றியது? என்பது குறித்த ஆய்வு கட்டுரைகளை வெளியிட சீன அரசு தடை விதித்து உள்ளது.
24 மணிநேரமும் :
வியட்நாமில் ஏழை மக்களுக்காக தினமும் 24 மணிநேரமும் ஏடிஎம்-ல் அரிசி விநியோகம் செய்யப்படுகிறது.
மாநிலச் செய்திகள்
கடலுக்கு செல்ல அனுமதி :
நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல கடலோர மாவட்ட ஆட்சியர்கள் அனுமதிக்கலாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
சிறப்பு முகக்கவசம் :
வைரஸ், பாக்டீரியாக்களை அழிக்கும் சிறப்பு முகக்கவசத்தை குஜராத்தின் CSMCRS-ஐ சேர்ந்த விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு :
பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை விடுமுறையை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அத்துடன் ஏப்ரல் 30ஆம் தேதி வரை அனைத்துவிதமான செமஸ்டர் தேர்வுகளும் நடைபெறாது எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கை மே 3 வரை நீட்டிப்பு செய்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.
இன்று (செவ்வாய்க்கிழமை) 10 மணிக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர் இந்த 19 நாட்கள் நீட்டிப்பு அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
விமானப் போக்குவரத்து முழுமையாக ரத்து :
மே 3ஆம் தேதி வரை அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் விமானப் போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்படுவதாக விமானப் போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
மதுபான ஆலைகள் செயல்பட அனுமதி :
சானிட்டைசர்ஸ் தயாரிக்க பயன்படும் ஆல்கஹால், அதிகமாக தேவைப்படுவதால் மதுபான ஆலைகளை முழுமை செயல்பட அனுமதி தரப்படும் என ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது.
மாலை அணிவித்து மரியாதை :
அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் அரசு அறிவித்தபடி, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
மத்திய அமைச்சரவை கூட்டம் :
பிரதமர் மோடி தலைமையில் நாளை டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
யாரும் கவலைப்படத் தேவையில்லை :
மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், மருந்துகள், அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் தேவையான அளவுக்கு கையிருப்பில் உள்ளன எனவும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதை நினைத்து யாரும் கவலைப்படத் தேவையில்லை எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மாவட்டச் செய்திகள்
மெட்ரோ நிர்வாகம் தெரிவிப்பு :
ஊரடங்கு நீட்டிப்பால் சென்னை மெட்ரோ ரயில் சேவையும் மே 3ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2,600 டன் அரிசி :
நாமக்கல்லிற்கு சரக்கு ரயில் மூலம், ரேஷன் கடைகளுக்கு தேவைப்படும் 2,600 டன் அரிசி தஞ்சாவூர், கும்பகோணம், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வட மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
ஒத்திவைப்பு :
ஊரடங்கு நீட்டிப்பால் ஐபிஎல் போட்டிகள் மே 3ஆம் தேதிக்கு பிறகு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Reviewed by Bright Zoom
on
April 14, 2020
Rating:
No comments: